மத்திய அரசு எதிர்க்கட்சிகளுடன் போராடுவதை விட்டுவிட்டு, கோவிட்-19 இரண்டாவது அலை நோய்த் தொற்றை எதிர்த்துப் போராட வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 28, 2021

மத்திய அரசு எதிர்க்கட்சிகளுடன் போராடுவதை விட்டுவிட்டு, கோவிட்-19 இரண்டாவது அலை நோய்த் தொற்றை எதிர்த்துப் போராட வேண்டும்

ஜய்வீர் ஷெர்கில்

கரோனா -19 தொற்று நோய்க்கு எதிராக மேற் கொள்ளப்படும்  போராட்டத்துக்கான பெருமையை தங்களுடையதாக மட்டும் ஆக்கிக் கொண்டு, நெருக்கடி ஏற்பட்டதற்கான பழியை மட்டும் எதிர்க்கட்சிகள் மீது சுமத்துவது என்ற  தனது கொள்கையை மத்திய அரசு கைவிட்டு விட்டு, நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்டுள்ள தொய்வுகளை சரி செய்ய முன்வரட்டும்

‘‘மோசமான எடுத்துக் காட்டுகள் நல்ல எச்சரிக்கை அறிகுறிகளாகவும் இருக்கக் கூடும்'' என்ற புகழ் பெற்ற பழமொழி ஒன்று உள்ளது. 2020-2021 ஆம் ஆண்டின் கடுமையான கோடை காலத்தில் அணிய வேண்டிய தனிப்பட்ட பாதுகாப்பு உடைகள்  (PPE personal protective equipment ),  (N-95) முகக் கவசங்கள்,  கவச உடை (HAZMAT SUITS)உயிர்க்காற்று (Oxygen)ஆகியவற்றில் பற்றாக் குறை ஏற்பட்ட நமது அனுபவத்திற்குப் பிறகு,  மத்திய அரசு பற்றாக்குறையை சரி செய்யும் நடவடிக்கை களை மேற்கொள்ளும் என்றும் உயிர்க்காற்று, மருந்து கள், உள்நாட்டுத் தேவைகளை அலட்சியப் படுத்தி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு முன்னுரிமை அளித்தது போன்ற கடந்த கால தவறுகளை திரும்பவும் செய்யாது என்றே நாடு நம்பிக்கொண்டிருந்தது. அப்படி யிருந்தும் உயிர்க்காற்று மற்றும் தடுப்பூசி மருந்துகளில் பற்றாக் குறை இருப்பதாகவும், மிகமிக அவசரமாக அவற்றை விநியோகிக்க வேண்டும்  என்ற நெஞ்சை உருக்கும் வேண்டு கோள்கள் எழுந்துள்ளதையும், தடுப்பூசி போடும் இயக்கம் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்வதையும்  பார்க்கும்போது, விழாக்களைக் கொண் டாடுவதில் மோகம் கொண்ட பா.,, அரசு இந்தத் தடுப்பூசி இயக்கத்தையே மிகமிக மோசமாகக் கையாண்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

கோவிட்-19 நோய்த்தொற்று இறப்புகள் அதிகமாகிக் கொண்டு வருவது மற்றும் நோய்த் தொற்றுக்கு எதிரான இயக்கத்துக்குத் தேவையான கருவிகள் குறைந்து கொண்டே வருவது என்ற கெட்ட செய்திகளுக்கு இடையிலேயும், நமது மக்கள் தொகையில் 80 சதவிகித அளவினர் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதாலும், கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் என்பதாலும், அவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதாலும்,  நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக் கையை அரசு இறுதியில் ஏற்றுக்கொண்டது இந்திய இளைஞர்களை நிம்மதிப் பெருமூச்சு விடச் செய்துள்ளது.

என்றாலும், பதில் அளிக்கப்படாமல் உள்ள பல கேள்விகள் நாட்டு மக்களிடம் உள்ளன. அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடுவது என்ற கொள்கைக்குப் பச்சைக் கொடி காட்டுவதற்கு ஏன் இவ்வளவு நீண்ட கால அவகாசத்தை அரசு எடுத்துக் கொண்டது? உள்நாட்டுத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்காமல் வெளிநாடுகளுக்கு தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்தது ஏன்? தற்போது எழுந்துள்ள கரோனா-19 நோயின் இரண்டாவது அலைவரிசை தாக்குதலை எதிர்பார்த்து அதற்கான மருத்துவ சிகிச்சைக் கருவிகளை அதிக அளவில் வாங்கி கையிருப்பில் வைத்திருப்பதை நமது விவேகம் மிகுந்த ஆண்களும் பெண்களும் ஏன் உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை?

நோயை எதிர்த்துப் போராடும் உள்நாட்டு ஆற்றலை கடந்த ஓராண்டில் உருவாக்கி, பெருக்கி, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற அறிவார்ந்த மக்களின் குரலைக் கேட்டு அதன்படி அரசு செயல் பட்டிருக் குமேயானால், இந்த நோயின் இரண்டாவது அலை வரிசை தாக்குதலை எதிர் கொள்வதற்கு ஏற்றதொரு மேலான நிலையில் இந்தியா இருந்திருக்கக் கூடும்.  உள்நாட்டுப் பயன்பாட்டுக்காக நாட்டில்  உள்ள மருந் துகள், உயிர்க்காற்று, தடுப்பூசி ஆகியவற்றில் பற்றாக் குறை ஏற்பட்டிருப்பது நோய்க்கு எதிரான போராட் டத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய  தடையாகும். நோய் எதிர்ப்புக்கு மிகமிக முக்கியமான இந்த மருந்துகளும் சிகிச்சை தளவாடங்களும் தங்கு தடையின்றி தொடர்ந்து கிடைக்காத வரையில், இந்த தாரள மயமாக்கப்பட்ட தடுப்பூசி இயக்கம்,  வரைபடம் போட்டு திட்டமிட்ட முறையில் பா... அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்ட இயக்கங்களில் மற்றொன்றாக ஆகிவிடும்.

இந்தியா மற்றும் இதர உலக நாடுகளிலும் தடுப்பூசி இயக்கம்

இதனைத் தவிர்க்க வேண்டுமானால், தடுப்பூசி இயக்கத்துக்கு இறக்கை கட்டி, தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் அனைத்து அதிகப்படியான மருந்து களும் இந்த இயக்கத்தில் எந்த அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு பயன்படுத்து வதை ஆட்சியாளர்கள் குட்டிக் கரணம் அடித் தாவது உறுதி செய்யவேண்டும். பொது மக்கள் வசம் உள்ள புள்ளி விபரங்களை வைத்துப் பார்க்கும்போது,  ஒரு லட்சம் மக்களில் எவ்வளவு பேருக்கு தடுப்பூசி போடப் பட்டுள்ளது என்பதில் உலக நாடுகளின் சராசரியை விட இந்தியா பின்தங்கியிருக்கிறது. 136 கோடி அளவில் மக்கள் தொகை உள்ள இந்தியாவில், சராசரியாக ஒரு கோடி மக்களுக்குத்தான் இரண்டு டோஸ் தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளது. மக்கள் தொகையில் 8 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள இப்போதைய நிலையில், தடுப்பூசி போடும் வேகத்திலும், கூடுதல் பயனாளிகளுக்கு சேவை செய்வதிலும் இந்தியா மிகமிகப் பின் தங்கியுள்ளது. இஸ்ரேல் நாட்டின் அதன் மக்கள் தொகையில் 61 . 8 சதவிகித அளவிலான மக்களுக்கும், அமெரிக்காவில் 39 . 2 சதவிகித அளவிலான மக்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சிலி, பூடான் போன்ற சிறிய நாடு களில் கூட, அந்நாடுகளின் மக்கள் தொகையில்  முறையே 67.4 சதவிகிதம் மற்றும் 62 சதவிகித அள விலான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்ட மக்களின் அளவு மொராக்கோ நாட்டில் தடுப்பூசி போடப்பட்ட 12.6 சத விகித மக்கள் தொகையை விடவும்கூட குறைவாக உள்ளது. நிலைமை மேலும் மோசமானதாக ஆக்கு வதற்காக, அதிக அளவில் பாதிக்கப்பட்ட மகாராட்டிர மாநிலம் உள்ளிட்ட இந்திய மாகாணங்கள் பலவற்றில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டதனால்,  நாட்டின் பல பகுதிகளிலும், தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 நோய்த் தொற்று என்னும் புயலின் வால்பகுதி தாக்குதலில் இருந்து இந்தியா தப்பித்துக் கொள்ள வேண்டுமென்றால் இப் போதுள்ள நிலை மாற்றம் பெறவேண்டும்.

அமெரிக்காவுடன் பேசுங்கள்

தடுப்பூசி தயாரிப்பாளர்கள், குறிப்பாக இந்தியாவின் சீரம் நிறுவனம், தடுப்பூசி தயாரிப்பதற்கான கச்சாப் பொருள்கள் பற்றாக்குறையைப் பற்றி ஏற்கெனவே சிவப்புக் கொடியை உயர்த்தியுள்ளது. தங்கள் நாட்டின் 1950 ஆம் ஆண்டு பாதுகாப்புப் பொருள்கள்  சட்டத்தைப் பயன்படுத்தி, இந்த கச்சாப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளதே அந்தப் பற்றாக் குறைக்குக் காரணம். கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கு அவசரமாக தேவைப்பட்டபோது,  5 கோடி அய்ட்ராக்சிகுளோரோகொயின் மாத்திரைகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இதனை எடுத்துக் கூறி,  ராஜதந்திரத்துடன்,  கச்சாப் பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள தடையை விலக்குவதற்கு, மேலும் கால தாமதமின்றி, இந்திய வெளியுறவுத் துறை செயல்பட்டு, தாங்கள் செய்த உதவிக்கு பிரதி உதவி செய்ய வேண்டும் என்று அமெரிக்காவைக் கேட்பதற்கு இந்திய அரசு சற்றும் தயங்கக் கூடாது. தடுப்பூசி கையிருப்பு இல்லை என்ற காட்சி,  கோவிட்-19 க்கு எதிராக இந்தியா மேற் கொண்டிருக்கும் போராட்டத்தைப் பலவீனப்படுத்துவது மட்டுமன்றி, நோய்த் தொற்று ஆபத்தை இந்திய அரசு தக்க உத்திகள் மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் என்ற பொது மக்களின் நம்பிக்கையை சீரழிப்பதாக இருப்பதுமாகும்.

அது மட்டுமன்றி, இளம் இந்தியாவும்,  நமது சமூகத்தில் வசதி வாய்ப்புகள் அற்றிருக்கும் பகுதி மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்காமல் போய்விடுவதைத் தவிர்த்துக் கொள்ளும் நோக்கத்துடன்,  அவர்களுக்கு உள்ள பொருளாதாரத் தடைகள், கட்டுப்பாடுகள் நீக்கப்படுவது மிகமிக அவசியமானதாகும்.

முதலாவதாக, லட்சக்கணக்கான கோடி ரூபாய் சரக்கு மற்றும் சேவை வரி வசூலில் மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட வேண்டிய பங்குத் தொகை நீண்ட காலமாக அளிக்கப்படாமல் இருப்பதால், மாநில அரசுகள் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டு தடுமாறிக் கொண்டிருக்கின்றன. தடுப்பூசி மருந்து தயாரிப்பாளர் களிடமிருந்து  நேரடியாக  மாநில அரசுகள் வாங்கிக் கொள்வதற்கு ஏதுவாக, இந்த சரக்கு மற்றும் சரக்கு வரி பங்கினை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பங்கிட்டு அளிக்க வேண்டும். அதனால் மாநில அரசுகள் தடுப் பூசிகளுக்கான செலவை கூடுதல் சுமையாக ஏற்க வேண்டிய நிலை அமையாது.

தடுப்பூசி ராஜதந்திரத்தை சிறிது காலம் நிறுத்தி வைக்கலாம்

இதில் மறு ஆய்வு செய்ய வேண்டிய மற்றொரு அம்சம் என்னவென்றால், நமது உள்நாட்டுத் தேவை களுடன், மற்ற நாடுகளுடன் ராஜதந்திர உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்காக உலக அளவில் தடுப்பூசி வழங்குவது என்று இந்தியா பொறுப்பேற்றுக் கொண் டிருப்பதுபற்றி மறுபரிசீலனை செய்யவேண்டும். கோவிட்-19 தொற்று நோயை எதிர்த்து தனித் தனி நாடுகள் அளவில்  போராடுவது என்ற   நாடுகளின் பங்களிப்பு உலக அளவில் போராடுவது என்று விரிவடைந்துள்ளது. நாடுகளின் உள்நாட்டுத் தேவைகள் மற்றும் தங்கள் நாட்டு மக்களின் உயிர்களைப் பாதுகாப்பது ஆகிய காரணங்களினால்,  உள் நாட்டுத் தேவைகளுக்கு மிக உயர்ந்த முன்னுரிமையை இந்த நாடுகள் அளிக்க வேண்டியிருக்கிறது.

2021  மார்ச் 17 அன்று மாநிலங்கள் அவையில் ஒரு கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்தபோது, இந்திய மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அது வரை மொத்தம் 7.6 கோடி தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால், அதே நேரத்தில் 5.96 கோடி தடுப்பூசி மருந்துகள் 74 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அண்மையில் அளித்துள்ள புள்ளி விபரங்களில் இருந்து, 2021 ஏப்ரல் 19 அன்றைய நிலையில் 6.6 கோடி தடுப்பூசி மருந்துகள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் அயல்நாடுகளுக்கு மானியமாக அளித்த தடுப்பூசிகளும்,GAVI, COVAX வசதிகளின்கீழ் வியாபார அடிப் படையில் விற்பனை செய்த மருந்துகளும் அடங்கும்.

கோவிட்-19 நோய்த் தொற்றின் இரண்டாவது அலை வரிசை தீவிரமாக இந்தியாவைத் தாக்கும் என்று அறிவியலாளர்கள் எச்சரித்துள்ள நிலையில், அதனை எதிர்க்கத் தேவைப்படும் இந்தியாவின், தவிர்க்க முடியாத உள் நாட்டுத் தேவையைக் கருத்தில் கொள் ளாமல், 11 லட்சம் ரெம்டெசிவிர் தடுப்பூசிகள் கடந்த ஆறு மாத காலத்தில் அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்திய மக்களின் நலன்களைப் பாதிக்கும் அளவில் தடுப்பூசி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நாடாளுமன்றத்திற்கு அளித்த ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவரது கூற்று உண்மையல்ல என்பதை அரசின் புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன. எனவே, சமன்பாட்டை சமன்படுத்த வேண்டிய நேரம் இப்போது வந்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. தடுப்பூசி விநியோகப் பிரச்சினையை பா... தீவிரமாகக் கையாளாமல் இருப்பது எதனைப் போல இருக்கிறது என்றால்,  காட்டுத் தீ பரவி கொழுந்துவிட்டு எரிவதைப் பார்த்த பிறகும், தீயணைப்பு நிலையங்களை பா... அரசு பூட்டி வைத்திருப்பது போலவே இருக்கிறது.

மிகமிக முக்கியமாகவும் இறுதியாகவும் கூற வேண்டியது என்னவென்றால்,  அரசியல் எதிர்க்கட்சி களுடன் போராடுவதை விட்டுவிட்டு, மத்திய அரசின் நிர்வாக இயந்திரம் கோவிட்-19 நோய்க்கு எதிராகத் தனது போராட்டத்தை திசை திருப்புவது மிகமிக இன்றியமையாதது ஆகும். டாக்டர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை கேலி செய்து அலட்சியப்படுத்தும் பா... அரசு,  அவர்கள் கூறிய தையே அடுத்த நாளில் அறிமுகப்படுத்தியது பா... வின் மிகமிக இழிந்த வகையிலான அரசியலையே வெளிப்படுத்துகிறது.

கூட்டாட்சிக் கொள்கையின் ஒத்துழைப்பு உணர்வை நிலை நாட்டுவதற்காக, கரோனா -19 தொற்று நோய்க்கு எதிராக மேற்கொள்ளப்படும்  போராட்டத்துக்கான பெருமையை தங்களுடைய சாதனையாக மட்டும் ஆக்கிக் கொண்டு, நெருக்கடி ஏற்பட்டதற்கான பழியை மட்டும் எதிர்க்கட்சிகள் மீது சுமத்துவது என்ற  தனது கொள்கையை மத்திய அரசு கைவிட்டு விட்டு, நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்டுள்ள தொய்வுகளை சரி செய்ய முன்வரட்டும்,

உண்மையான தடுப்பூசி உற்சவத்தை எப்போது காண முடியும் என்றால்,  இந்திய மக்களில் பெரும் பகுதியினருக்கு தடுப்பூசி போடப்பட்டு,  மருத்துவ மனைகளில் படுக்கை வசதிகள், உயிர்க் காற்று சிலிண் டர்கள், தங்களால் சாதாரண மக்களால் விலை கொடுத்து வாங்க முடியாத தடுப்பூசிகள் குறைபாட்டினால் ஒரு நோயாளி கூட இறந்து போகவில்லை என்ற நிலை ஏற்படும்போதுதான் பார்க்கப்பட இயலும்.

நன்றி: ‘தி இந்து', 21.04.2021

தமிழில் : ..பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment