இந்தியாவில் கண்டறியப்பட்ட இரட்டை உருமாற்ற வைரசுக்கு புதிய பெயர் பி.1.617

புதுடில்லி,ஏப்.10- இந்தியாவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள இரட்டை உருமாற்றம் அடைந்த வைரசுக்கு பி.1.617 என்ற பெயரை சூட்டியுள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவில் இருந்து உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவியது. பின்னர், வைரஸ் ஒவ்வொரு நாட்டுக்கு ஏற்றாற்போல் அதன் மரபணுக்களில் மாற்றம் ஏற்பட்டு புதிய வைரஸ்கள் உருவாகி வருகின்றன. பிரிட்டன், தென்ஆப்ரிக்கா, பிரேசில் நாடுகளில் பலவித உருமாறிய கரோனா வைரசுகள் பரவி வருகின்றன. அவை வீரியம் கொண்டவையாக உள்ளன. இவை மற்ற நாடுகளுக்கும் பரவி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதேபோல், இந்தியாவில் சில வைரஸ்கள் இரட்டை உருமாற்றம் அடைந் துள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட வைரசுக்கு பி.1.1.7 எனவும், தென்ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரசுக்கு பி.1.351 என்றும் பெயர் சூட்டி இருந்தனர். அந்த வகையில், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டை உருமாற்ற கரோனா வைரசுக்கு பி.1.617 என்ற பெயரை சூட்டி இருக்கிறார்கள்.

இந்த பி.1.617 வைரஸ் மஹாராட்டிர மாநிலத்தில் அதிகளவில் பரவி இருக்கிறது. உத்தரப்பிரதேசம், குஜராத், மேற்குவங்காளம் ஆகியவற்றிலும் அதிகளவில் தென்படுகின்றது. ஆனால் இவை எந்தெந்த மாநிலங்களில் பரவலாக காணப்படுகின்றன என்பது பற்றி ஆய்வு எதுவும் நடத்தப்படவில்லை.

Comments