காவல்துறையில் புதிதாக 100 பேருக்கு கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 14, 2021

காவல்துறையில் புதிதாக 100 பேருக்கு கரோனா

சென்னை, ஏப்.14 காவல் துறையில் புதிதாக 100 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை, தேனாம்பேட்டை யில் காவல்துறை சார்பில் கரோனா விழிப்புணர்வு   நிகழ்ச்சி நடை பெற்றது.

இதில் சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர் வால் கலந்துகொண்டார்

அப்போது காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர் வால் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:- “கரோனா தொற்றுப் பரவலின் ஆரம்பக் கட்டத்தில் மக்களுக்கு அதுகுறித்த விழிப்பு ணர்வு இல்லை. என்ன செய்வ தென்று அவர்களுக்குத் தெரிய வில்லை.  இப்போது, அவர்களுக்கு கரோனா குறித்து தெரிந்திருக்கிறது. இருந்தாலும், மக்கள் சோர்வடைந் திருக்கின்றனர்.

பொதுமக்கள் வெளியே எங்கு சென்றாலும் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசத்தை அகற்றக் கூடாது. அப்போதுதான் நாம் கரோனா தொற்றைத் தடுக்க முடியும்.

காவல்துறை தரப்பில் இதுவரை சுமார் 3,300 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது புதிதாக சுமார் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர் களில் சிலர் வீட்டுத் தனிமையில் உள்ளனர்.

காவல் துறையில் சுமார் 7,000 பேர் கரோனா தடுப்பூசி செலுத்தி யுள்ளனர்.

12.4.2021 அன்று மட்டும் 700 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் வைத்துள்ளனர். ஆனால், அதனை அணியமால் இருக்கிறார்கள். நாம் எச்சரித் தால்தான் போடுகின்றனர். சென் னையில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப் படுகின்றன”.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment