ரபேல் முறைகேடு குற்றச்சாட்டு மீண்டும் விசாரிக்கக் கோரும் மனு 2 வாரங்கள் கழித்து விசாரணை

 புதுடில்லி, ஏப். 14  ரபேல் முறை கேடு குற்றச்சாட்டு தொடர் பான மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் 2 வாரங் கள் கழித்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரபேல் போர்விமான ஒப் பந்தத்தைப் பெறுவதற்காக பிரான்சின் டசால்ட் நிறுவ னம் இடைத்தரகர் ஒருவருக்கு சுமார் ரூ.9 கோடி கொடுத்த தாக பிரான்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டு இருந்தது.

இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியு றுத்தி வருகின்றன.

இந்த விவகாரம் தொடர் பாக உச்சநீதிமன்றத்தில் ஏற் கெனவே மனு தாக்கல் செய்த வழக்குரைஞர் எம்.எல்.சர்மா, மீண்டும் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர் பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.. போப்டே தலைமையிலான அமர்வு முன் நேற்று (12.4.2021) நடைபெற்றது. அப்போது வழக்குரைஞர் சர்மா, ரபேல் ஒப்பந்த முறைகேடு தொடர் பாக தாக்கல் செய்யப்பட் டுள்ள மனுவை விரைவில் விசா ரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என முறையிட்டார்.

அதைப் பரிசீலித்த நீதிபதி கள், ரபேல் ஒப்பந்த முறை கேடு குற்றச்சாட்டு தொடர் பாக தாக்கல் செய்யப்பட் டுள்ள புதிய மனு மீதான விசாரணை 2 வாரங்கள் கழித்து நடைபெறும் என தெரிவித்தனர்.

Comments