அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா கருத்தரங்கம்

நாகர்கோவில், மார்ச் 15- அன்னை மணியம் மையார் பிறந்தநாள் விழா நாகர்கோவில் பெரியார் மய்யத்தில் மாவட்ட தலைவர் எம். எம். சுப்பிர மணியம் தலைமையில் நடைபெற்றது

மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன், பொதுக்குழு உறுப்பினர் . தயாளன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் சிவதாணு, மாவட்ட துணைத் தலைவர் .நல்லபெருமாள்    விடுதலை வாசகர் வட்ட தலைவர் முனைவர் ஜே.ரி.ஜூலியஸ், இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், மகளிர் பாசறை தலைவர் மஞ்சு குமாரதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்கள்.

பரிமளா திறன் வளர்ப்பு இயக்குநர் ஜே.எஸ்.பரிமளசெல்வி சிறப்புரையாற்றினார்.

அன்னை மணியம்மையாரின் சமூகப் பணிகளையும்  அவரது தூய தொண்டுள்ளத்தையும் எடுத்து கூறினார்.

மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் .மகேஷ், ஒன்றிய செயலாளர் எஸ்.குமாரதாஸ், சியாமளா, தர்மராஜ்,  பாலகிருஷ்ணன், எபி, கண்ணன் மற்றும் தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர் மாவட்ட திராவிட மாணவர் கழக அமைப்பாளர் இசைச் செல்வி நன்றி கூறினார்.

Comments