செய்தியும், சிந்தனையும்....!

எலி - தவளை கதை!

தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டாத அதிமுக வினரால் நெருக்கடியைச் சந்திக்கும் பா...வினர். 

'கூடா நட்பு கேடாய் முடியும்!'

15 லட்சம் என்னாச்சு

காங்கிரஸ் என்றால் பொய்கள், ஊழல்கள்! 

- பிரதமர் மோடி

ஆமாம் நம்புங்கள். பா...தான் சுத்த சுயம் பிரகாசங்கள்! ஒவ்வொருவர் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் போடுவேன் என்று சொன்னது என்னாச்சு?

யாருக்குச் சக்தி?

கோயில்களில் அர்ச்சனை செய்வது, பிரசாதம்; தீர்த்தம் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

- இந்து அறநிலைத்துறை உத்தரவு

எல்லாம் கரோனா உபயம்!

கெட்டிக்காரன் புளுகு?

திமுக அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் அரசுதான் 2012ஆம் ஆண்டு நீட்டைத் திணித்தது.

- அதிமுக விளம்பரம்

காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்தபோது நீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப்போட்டது திமுகதான். 'நீட்' செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையிலும் உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு போட்டு 'நீட்' செல்லும் என்று தீர்ப்பு வந்தது மத்திய பா... ஆட்சியில்தான்.

Comments