ஆபத்து! ஆபத்து!! ஆபத்து!!!

அனைத்து மாநில அரசு வேலைவாய்ப்புகளிலும் பொது தகுதித் தேர்வு நடத்தப்படுமாம்

மேற்கு வங்க தேர்தல் பரப்புரையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா

கொல்கத்தா, மார்ச் 22- மேற்கு வங்க மாநில தேர்தல் பரப்புரையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும்போது, அனைத்து மாநில அரசு வேலைவாய்ப்புகளில் பொது தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் என ஒட்டு மொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி வாய்ப்பைப் பறிக்கின்ற "நீட்" தேர்வு போல், அனைத்து மாநிலங்களிலும் அரசு வேலைவாய்ப்பில் பொதுத் தேர்வு நடத்தப் படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கு வங்க மாநில தேர்தல் பரப்புரையின்போது குறிப்பிட்டுள்ளார்.

சமூகநீதிக்குச் சவக்குழி வெட்டி விட்டார்கள் -

ஒடுக்கப்பட்ட மக்களே, என்ன செய்யப் போகிறீர்கள்?

Comments