அன்னை மணியம்மையார் நினைவு நாளில் தமிழர் தலைவர் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிப்பு - நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை

சென்னை, மார்ச் 16- அன்னை மணியம் மையார் நினைவு நாளில் (16.3.2021) காலை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் பெரியார் .வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணி யம்மையார் சிலைக்கு கழகத் தோழர்கள், மகளிர் தோழர்கள் மாலை அணிவித்து எழுச்சியுடன் ஒலிமுழக்கங்கள் எழுப்பினர். தொடர்ந்து தமிழர் தலைவர் தலைமையில் ஊர்வல மாக பெரியார் திடல் அடைந்து, பெரியார் திடலில் அமைந் துள்ள தந்தைபெரியார் 21 அடி உயர முழு உருவச்சிலைக்கு மாலை வைத்து எழுச்சி முழக்கங்களுடன்  மரியாதை செலுத்தப் பட்டது.

தந்தைபெரியார், அன்னை மணியம் மையார் நினைவிடங்களில் தமிழர் தலை வர் தலைமையில் கழகப் பொறுப்பா ளர்கள் மலர்வளையம் வைத்து மரி யாதை செலுத்தினர். அன்னை மணி யம்மையார் நினைவு நாளையொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிக்கையை திரா விட மாணவர் கழக மாநில செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார் வாசித்தார்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ், திராவிடர் கழக வழக்குரை ஞரணி தலைவர் .வீரசேகரன், வெளி யுறவு செயலாளர் கோ.கருணாநிதி, அமைப்புச்செயலாளர் வி.பன்னீர்செல் வம், பெரியார் புத்தக நிலைய மேலாளர் ..நடராசன், மோகனா வீரமணி, மருத் துவர் மீனாம்பாள்,  பகுத்தறிவு எழுத் தாளர் மன்றத் துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன், ஆடிட்டர் இராமச்சந் திரன், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட் டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமார தேவன், துணைத் தலைவர் கி.இராம லிங்கம், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், தாம்பரம் மாவட் டத் தலைவர் .முத்தையன், ஆவடி மாவட்டச் செயலாளர் .இளவரசு, அமைப்பாளர் உடுமலை வடிவேல், மாவட்ட துணைத் தலைவர் முத்தழகு, வடசென்னை மாவட்ட செய லாளர் தி.செ.கணேசன், அமைப்பாளர் புரசை அன்புசெல்வன், வடசென்னை மாவட்ட இளைஞரணி தளபதி பாண்டி யன், தென் சென்னை மாவட்ட துணை செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோத ரன், சி.வெற்றிசெல்வி, நல்லினி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக் குநர் பசும்பொன் செந்தில் குமாரி, திரா விட மகளிர் பாசறை மாநில செயலாளர் பா.மணியம்மை, கொடுங் கையூர் தங்க.தனலட்சுமி, பூவை செல்வி, பிரிசில்லா, மு.பவானி, வெண்ணிலா கதிரவன், மீனா குமாரி, மோகனப்ரியா, முத்துலட்சுமி, கலைமணி, கொரட்டூர் கோபால், தே.ஒளி வண்ணன், தாம்பரம் சு. மோகன்ராஜ், மா.குணசேகரன், பெரியார் மாணாக்கன், பெரியார் மணியம்மை மருத்துவமனை சார்பில் டாக்டர் தங்கம், திராவிடன் நிதி மற்றும் பெரியார் திடல் பணித் தோழர்கள் அன்னை மணியம்மையார் நினைவுநாள் நிகழ்வில் பங்கேற்றனர்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image