நூறு நாள் வேலை வாய்ப்பில் கோட்டைவிட்ட தமிழகம் : 15ஆம் இடத்தில் உள்ளது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 16, 2021

நூறு நாள் வேலை வாய்ப்பில் கோட்டைவிட்ட தமிழகம் : 15ஆம் இடத்தில் உள்ளது

ரய்ச்சூர், மார்ச். 16  அனைத்து துறைகளிலும் முன்னணியில் இருந்த தமிழகம் அதிமுக அரசின் நிர்வாகத்திறனின்மையால் பின் தங்கி உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 16 கோடிக்கும்  மேற்பட்ட வேலை வாய்ப்புகள் வழங்கப்பட் டுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது.   சுமார் 52% பேருக்கு வேலை இல்லா நிலை உள்ளது.  கரோனா கால கட்டத்தில் வேலை இன்மை மேலும் அதிகரித்துக் காணப்படுகிறது.  இதை யொட்டி 100 நாட்கள் கட்டாய வேலைத் திட்டம் எனக் கூறப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 15 கோடி பணிகள் அளிக்கப்படும் என மத்திய அரசு கூறியது.

2020_21 ஆம் வருடம் இந்த திட்டத்தின் கீழ் அதிக அளவில் சத்தீஸ்கர் மாநிலத்தில் பணிகள் வழங்கப்பட்டுள்ளன.  அதன்படி 16,06,84,000 பேர் பயன் அடைந்துள்ளனர்.  இது மத்திய அரசு அறிவித்துள்ள 15 கோடி பணிகளை விடவும் அதிகமாகும்.   இதுவரை இந்த அடிப் படையில் சத்தீஸ்கர் மாநிலம் 107% அதிக பணிகளை மக்களுக்கு அளித்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக 105% பணிகளை அளித்து மேற்கு வங்க மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  மூன்றாம் இடத்தில் அசாம் மற்றும் பீகார் ஆகிய இரு மாநிலங்களில் 104% பணிகள் அளிக்கப்பட்டுள்ளன.  அடுத்த இடத்தில் ஒடிசா மாநிலத்தில் 103% பணிகள் அளிக்கப்பட்டுள்ளன.

எடப்பாடி அரசின் நிர்வாகத் திறன் இன்மை மற்றும் மக்கள் நலனில் அலட்சியமான போக்கால் இந்த பட்டியலில் எப்போதும் 3 அல்லது நான்காம் இடத்தில் இருக் கும் தமிழகம் தற்போது 15-_ஆம் இடத்தில் உள்ளது.

No comments:

Post a Comment