இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர் எண்ணிக்கை 3 கோடியை நெருங்கியது

புதுடில்லி,மார்ச் 16- முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், முன்கள வீரர்களுக்கு கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி போட்டு வந்த நிலையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு கடந்த 1ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அரசு மற்றும் தனியார் சுகாதார மய்யங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த தடுப்பூசி முகாம்களில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பயனாளிகள் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

இதனால் தடுப்பூசி போட்டுக் கொண் டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை நெருங்கி விட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. 14.3.2021 அன்றைய  நிலவரப்படி 2 கோடியே 97 லட்சத்து 38 ஆயிரத்து 409 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள் 14லட்சத்து 40ஆயிரத்து 92 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 81லட்சத்து 87ஆயிரத்து 7 பேரும் அடங்குவர் எனவும் அமைச்சகம் கூறியுள்ளது.

Comments