விலை உயர்வுக்கு எதிராகபொதுமக்கள் குரல் கொடுக்க வேண்டும்காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி

புதுடில்லி, மார்ச் 7- நாளுக்கு நாள் பெரும் சுமையாக தொடர்ந்து கொண்டு இருக் கும் விலை உயர்வுக்கு எதிராக பொது மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலி யுறுத்தி உள்ளார்.

நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் பெட் ரோல், டீசல் விலை உயர்ந்து வருகின்றது. சமையல் எரி வாயு உருளையின் விலையும் அதிகரித்து உள்ளது. அத்யா வசிய பொருட்களின் தொடர் விலைஉயர்வானது, அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது.

இந் நிலையில், விலைவாசி உயர்வுக்கு எதிராக பொது மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக இணையவழி பிரச்சாரத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

இது குறித்து காங்கிரசின் சுட்டுரைப் பதிவில் குறிப் பிட்டு உள்ளதாவது: பாஜக என்பது பாரம் ஏற்றும் ஜனதா கட்சி. நாட்டின் நலனை கருதி அவர்களுக்கு எதிராக நாம் விரைவில் பேசு வோம். வாருங்கள் விலை உயர்வுக்கு எதிரான பிரச்சா ரத்தில் இணையுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல், ராகுல் தனது சுட்டுரைப் பதிவில், குறிப் பிட்டு உள்ளதாவது: விலை உயர்வு என்பது சாபமாகும். மத்திய அரசு மக்களை விலை யேற்றத்தில் மூழ்கடித்து வரி வருமானத்தை ஈட்டுகிறது. நாட்டின் அழிவுக்கு எதிராக குரல் கொடுங்கள் என்று வலியுறுத்திஇருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments