பெரியார் பாலிடெக்னிக் பெற்ற சிறந்த கல்லூரி விருது,சிறந்த கல்வியாளர் விருது மற்றும் சிறந்த மாணவர் விருது 2021

 

வல்லம், மார்ச் 7- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி திறன்மிகு இந்தியன் விருதுகள் 2021(Skill Indian Awards)  என்ற தலைப்பில்  முப்பெரும் விருதுகள் பெற்றது. இந்திய கிராமங்களில் வேலையில்லா இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளித்து தொழிற்சாலை களுக்கு தேவையான திறன்மிக்க இளைஞர்களை உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதோடு தொழிற்சாலைகளின் மனிதவள தேவைகள பூர்த்தி செய்யும் உன்னதப் பணியில் தங்களை இணைத்துக் கொண்டு சிறப்பாகப் பணியாற்றி வரும்  பாலிடெக்னிக் கல்லூரி, அதன் முதல்வர் மற்றும் மாணவர்களைத் தேர்ந் தெடுத்து விருது வழங்கப்படுகிறது.

திறன்மேம்பாட்டு பயிற்சிகள அளித்து கிராமப்புற இளைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை  உயர்த்தும் பணி யில் சிறந்து விளங்கும் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூ ரிக்கு சிறந்த கல்லூரிக்கான விருது(The Best College Award)  வழங்கப் பட்டது. கல்விப் பணிகளோடு சமுதாய மேம்பாட்டு பணிகளையும் ஒருங்கி ணைத்து இக் கல்லூரியை  திறம்பட வழிநடத்தும் முதல்வர் டாக்டர் இரா.மல்லிகா அவர்களுக்கு சிறந்த கல்வியாளருக்கான விருது (Education Excellence Award வழங்கப் பட்டது. மேலும் இக்கல்லூரியின் மூன்றா மாண்டு இயந்திரவியல் துறை மாணவர் செல்வன் ஜெரிசன் கிராஸ் தனது சிறப்பான செயல்பாட்டிற்காக சிறந்த மாணவர் விருதை  (Icon of Students Award) பெற்றார். 

இவ் விருதுகளைப் பெற காரண மாக இருந்த கல்லூரி முதல்வர், பேராசிரி யர்கள் மற்றும் மாண வர்களை இக் கல்லூரியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பாராட்டினார்.

Comments