தாழ்த்தப்பட்ட மக்களை ஹிந்துத்துவ அடையாளத்திற்குள் கொண்டு வருவதற்கு ஆர்.எஸ்.எஸ். பல உத்திகளைக் கையாளுகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 31, 2021

தாழ்த்தப்பட்ட மக்களை ஹிந்துத்துவ அடையாளத்திற்குள் கொண்டு வருவதற்கு ஆர்.எஸ்.எஸ். பல உத்திகளைக் கையாளுகிறது

 - ஆர்.எஸ்.எஸ்.சின் உருமாற்ற வித்தைகளை அம்பலப்படுத்தும்

சமூக வரலாற்றாளர் பத்ரி நாராயணன்

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் பற்றியும், காவி  அரசியலைப் பற்றியும்  புகழ் பெற்ற சமூக வரலாற்றாளரான பத்ரி நாராய ணன் விரிவாக ஒரு நூலை எழுதியுள்ளார். அண் மையில் வெளியிடப்பட்ட தனது  “ஹிந்துத்துவக் குடியரசு”  என்ற அவரது நூலில், தனது உலகக் கண்ணோட்டத்தைப் பரப்புவதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடர்ந்து தன்னைத் தானே எவ்வாறு உருமாற்றிக் கொள்கிறது என்று விளக்கமாகக் கூறியுள்ளார். தேர்தல்களின் போது ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் பங்களிப்பு என்ன என்பதைப் பற்றியும், அதன் சவாலை எதிர்கொள் வதற்கு எதிர்க் கட்சிகள் எவ்வாறு  தங்களது பிரச்சார உத்தி களை மாற்றிக் கொள்ள இயலும் என்றும் பத்ரி நாராயணனுடன்டைம்ஸ் ஆஃப் இந்தியாசெய்தியாளர் அவிஜித் கோஷ் பேசியதிலிருந்து... (பேட்டி)

அவிஜித் கோஷ் : ஹிந்துத்துவ அரசியலின் கருவறை என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் பற்றி நீங்கள் விவரித்து இருக் கிறீர்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தாக்கும் சக்திகள் உண்மையில் அதன் நிழலுடன்தான் சண்டை யிட்டுக் கொண்டிருக் கிறார்கள். ஆனால் உண்மையான ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் பற்றி  புரிந்து கொள்ள முடியாதவர்களாகவே அவர்கள் இருக்கின்றனர் என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். புதிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எவ்வாறு இருக்கிறது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

உருமாற்றிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்.

பத்ரி நாராயண் : 1990களுக்குப் பிந்தைய இந்தியா, தாராளமயமாக்கல்  மற்றும் உலகமய மாக்கல் என்னும் புதிய கோட்பாடுகளினால் மறுவடிவமைக்கப்பட் டுள்ளது.  புதிய புதிய வடிவங்களிலான சமூக எதிர்பார்ப்புகளையும் விழைவுகளையும் இவை உருவாக்கியுள்ளன. இத்தகைய அனைத்து சிக்கல்களையும் எதிர் கொள்ள வேண்டிய தேவை ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு இருந்தது. இந்த சவாலை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நன்றாகவே எதிர் கொண்டது. உருவாகி வரும் புதிய புதிய சமூக சவால் களுக்கேற்ப, தன்னைப் பற்றிய அர்த்தத்துக்கும், தங்களது வாதங்களுக்கும்,   புதிய விளக்கங்களை  அளிப்பதன் மூலம் தொடர்ந்து தன்னைத் தானே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு (உரு) மாற்றிக் கொண்டு வந்துள்ளது.  சுற்றுச்சூழல், திருநங்கைகள் போன்ற பிரச்சினைகளில் அவர்களது நிலைப்பாடு, தீவிரமான நவீனத்துவத்தாலும் மற்றும் விரைந்த உலகமயமாக்கலாலும் எழுப்பப்பட்ட கேள்வி களை எவ்வளவு சிறப்பாக அவர்கள் எதிர் கொண்டார்கள் என்பதைக் காட்டுவதாக உள்ளது. 

(1.) சிலவற்றை மறக்கடித்தல்

(2.) தங்களுக்குத் தேவையான நேரத்தில் மட்டுமே சிலரை நினைவு கூர்தல், பாரம்பரி யங்கள், நினைவுகள் மற்றும் வரலாறுகளை மீண்டும் கண்டுபிடிப்பது போன்ற உத்திகள், தங்கள் கருத்துகளுக்கு எதிரானவர் களையே தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள ஆர்.எஸ்.எஸ்.சுக்கு பயன்படுகின்றன.

எம்.எஸ்.கோல்வால்கர் எழுதிய  ஞான கங்கை’  (Bunch of Thoughts)   என்ற நூலில் தெரிவிக்கப்பட்டுள்ள  குறிப்பிட்ட சில கருத்துகளை மறந்துவிட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் அண்மையில் விளக்கிக் கூறியுள்ளார். அதற்கான காரணமாக அவர் கூறுவது,  சமூகமும், காலமும் மாற்றம் அடையும்போது கருத்துகளும் மாறுபடுகின்றன என்பதுதான். அதே சமயம், ஹிந்துத்து வாவின் பிரதிநிதிகள் என்று தங்களைப் பற்றி பெருமையாகப் பேசிக் கொள் ளும் துணை காவி அமைப்புகளால் தோற்று விக்கப்பட்டுள்ள தங்கள்மீதான  தோற்றத்தை மாற்றிக் கொள்வதற்கு ஆர்.எஸ்.எஸ். போராடிக் கொண்டு இருக்கிறது.

அவிஜித் கோஷ் : தாழ்த்தப்பட்டவர்கள்  பழங்குடி மக்கள் போன்ற பல்வேறுபட்ட சமூகக் குழுக்களை, அகண்டதொரு ஹிந்துத்துவக் கோட் பாட்டுக் குடையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பல ஆண்டு காலமாக செயல்பட்டுக் கொண்டு வந்திருக்கிறது. இன்றைய நாட்களில் எவ்வாறு அந்த அமைப்பு வேலை செய்து கொண்டு இருக்கிறது  என்பதை அடிமட்ட அளவிலான சில  எடுத்துக்காட்டு களுடன் எங்களுக்குக் கூற  முடியுமா?

வித்தைகள் மூன்று வகை

பத்ரி நாராயண்: பெரிதும் பார்வைக்கு வராத ஓரங்கட்டப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகங்கள்,  நாடோடிகள், பகுதியளவு நாடோடிகள், முன்னாள் நாடோடிகள் மற்றும் பழங்குடியினர் சமூகங்கள் ஆகியவற்றுடன், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மூன்று வழிகளில் செயல்பட்டு வருகின்றது.

(1.) ஓரங்கட்டப்பட்ட சமூக மக்களின் மனங்களிலும், இதயங்களிலும் தங்களுக்கு என்று ஓர் இடத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக, பள்ளிகள், மருத்துவமனைகளை போன்ற சேவை அமைப்புகளை நிறுவுவது மற்றும் பாரம்பரிய நீராதாரங்களைப் பாதுகாத்து பராமரிப்பது என்ற வழிகளில் செயல்படுவது ஒரு வழி.

(2) அவர்களது கதாநாயகர்கள், வரலாறுகள், நினைவுச் சின்னங்கள் மற்றும் இதர அடையாள ஆதாரங்களுக்கு திரித்து விளக்கம் தருவதன் மூலம் ஒரு மாபெரும் ஹிந்துத்துவ அடை யாளத்தின் ஒரு பகுதியாக இம்மக்களை ஆக்குவது என்பது மற்றுமொரு வழி. 

(3) ஓரங்கட்டப்பட்ட சமூகங்களுக்கு மத வழிபாட்டுக் கான இடம் என்ற ஆசையை நிறைவேற்றித் தருவது, அச்சமூகங்களை பொதுப் பார்வைக்குக் கொண்டு வருவது ஆகியவை மூன்றாவது வழியாகும்.

எடுத்துக்காட்டாக பண்டல்கண்டில் உள்ள கபூர்த ராக்கள், குச் பதியாக்கள், ஹரி மற்றும் சபேராக்கள் போன்ற சிறுசிறு தாழ்த்தப்பட்ட சமூக மக்கள், தங்கள் குடியிருப்பு களில் தங்கள் சமூகங்களின் கடவுள்களுக்கான கோயில்கள் வேண்டும் என்று விரும்புகின்றனர். தங்களது பாம்புக் கடவுளின் கோயில் ஒன்றைத் துவக்கி வைப்பதற்காக முதல்வர் யோகி ஆதித்திய நாத்தை அழைக்க வேண்டும் என்று சபேராக்கள் எந்த அளவுக்கு விரும்பினர் என்பதை எங்களது களப் பணியின் போது நாங்கள் கண்டோம். அவர்களுக்கு அந்த விருப்பம் இருக்கிறது. ஆனால் கோயிலைக் கட்டுவதற்கான ஆற்றல் அவர்களுக்கு இல்லை. அவர்களது அடையாளச் சின்னமாக ஆகிவிட்ட அவர்களது தெய்வங் களுக்காக உள்ளூரில் கோயில் கட்டுவதற்கு உதவுவதன் மூலம் அவர்களது இத்தகைய விருப்பங்களை ஆர்.எஸ்.எஸ். நிறைவேற்றித் தருகிறது.

அது மட்டுமன்றி, குக்கிராமப் பகுதிகளில் இருக்கும் ஓரங்கட்டப்பட்ட சமூக மக்களிடையே புகழ் பெற்றிருக்கும்  கதாகா லட்சேபம் செய் பவர்கள், பிரவசனக்காரர்கள், ராம்லீலா குழுக்கள் ஆகியோருடனும்ஆர்.எஸ்.எஸ்ஸின் அமைப்புகள் தொடர்பை ஏற்படுத்தி வைத்திருக் கின்றன. புகழ் பெற்ற இது போன்ற மதம் சார்ந்த  நாடோடிக் கதைகள், நாடகங்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்வதன் மூலம், ஓர் ஹிந்துத்துவ பொது உணர்வினை அவர்களிடையே ஆர்.எஸ்.எஸ். உருவாக்குகிறது.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களி டையே இப்படி அடையாளத்தைத் தேடும் விழைவு அல்லது விருப்பம் உருவாகி வருவது எனும் ஒரு  புதிய திருப்பம் உருவாவதை, இடதுசாரி மித வாதிகளும், தேசிய நீரோட்டத்தில் உள்ள அம்பேத்கர் பரப்புரையாளர்களும் காணத்தவறி விட்டனர். இத்தகைய உந்துதலை உணர்ந்திருந்த அம்பேத்கர் தனது அரசியல் செயல்பாடுகளில் அதனை இடம் பெறச் செய்து வைத்திருந்தார். ஆனால், சிறிது காலத்திற்குப் பிறகு, அம்பேத்கரியர்களால்கூட இத்தகைய சமூகங்களின் உள்ளுறைந்த உந்து தல்களின் மீது கவனம் செலுத்த இயலாமல் போய்விட்டது.

அம்பேத்கரின் பிம்பத்தை மாற்றும் ஆர்.எஸ்.எஸ்.

அவிஜித் கோஷ் : பி.ஆர். அம்பேத்கரை இன்று ஆர்.எஸ்.எஸ். எவ்வாறு பார்க்கிறது?  அவர் சார்பாக எதனைக் கூறுகிறது?

பத்ரி நாராயண் : சமூக விமர்சகர் என்பதி லிருந்து மகா புருஷராக, அம்பேத்கரின் தோற்றத்தை மாற்றி, தாழ்த்தப் பட்ட மக்க ளுக்கு மட்டுமன்றி அனைத்து இந்திய  மக்களுக் கும்கடவுள் போன்ற  தோற்றத் திற்கு  மாற்றி அமைக்கும் பணி யில் ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டி ருப்பது கவனிக்கத் தக்க செய்தி யாகும். ஹிந்துத்துவத்துக்கு எதிரான  பரப்புரைக்கு  எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது சமூக அமைப்போ அம்பேத் கரைப் பயன்படுத்திக் கொள்ள முடியாததொரு வழியில் அவரது பிம்பத்தை அவர்கள் மாற்றி அமைத்துக் கொண்டு வருகின்றனர். 

ஜாதி  முறையை அம்பேத்கர் கண்டித்திருப்பதைப் பற்றி எவராவது ஒருவர் குறிப்பிடும் போது, அந்த விமர்சனத்தை அவர்கள் பாராட்டுவது மட்டு மன்றி, இந்திய சமூகத்தில் உள்ள இத்தகைய அனைத்து கேடு களையும் நீக்குவதற்குப் பணி யாற்றி வரும் ஓர் அமைப் பாகவே அவர்கள் தங்களை, சில நேரங்களில்  காட்டிக் கொள்கின்றனர்.

அவிஜித் கோஷ் : தன்னை ஓர் கலாச்சார அமைப்பு என்று ஆர்.எஸ்.எஸ். கூறிக்கொள்கிறது. என்றாலும் 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுத் தேர்தல்களில் அவர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டி ருந்தனர். உண்மையில் தேர்தல் நேரங்களின் போது அதன் வேலைதான் என்ன?

பத்ரி நாராயண் : பா.. கட்சியின் செயல் பாட்டின் மீது நேரடியாகவோ, மறை முகமாகவோ ஆர்.எஸ்.எஸ். செல்வாக்கு செலுத்தி வருகிறது.

தேர்தல்களில் ஆர்.எஸ்.எஸ்.

() சங்கத்தின் சில பிரச் சாரகர்கள் பல்வேறு பட்ட நிலைகளில் பா.. கட்சிக்காக பணி யாற்றுகிறார்கள். 

()தேர்தல் காலங்களின் போது, பல்வேறு பட்ட காரணங்களால்  அதிருப்தி அடைந்திருக்கும் பா... தொண்டர்களிடம் இருந்து அதனை நீக்கவும், மக்கள் கருத்துகளைத் திரட்டும் முகமை யாகவும் அது செயல் படுகின்றது. பல இடங்களில் வாக்குச் சாவடி நிர்வாகத்தை மேற்கொண்டு,  வாக்காளர்களை வாக்குச் சாவடிக்குக் கொண்டு வந்து சேர்க்கும் பணியையும் ஆற்றுகின்றனர்.

() 2014ஆம் ஆண்டில் மோடி ஆற்றிய உரையைப் பற்றிய பொது மக்களின் கருத்துக் களை திரட்டும் பணியையும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அவர்கள் மேற்கொண்டனர்.

() யாருக்கு வாக்களிப்பது என்பது பற்றி முடிவு செய்யாமல் இருக்கும் தேநீர் வியாபாரிகள், காய்கறி வியாபாரிகள், தினக் கூலிகளை பா..கட்சிக்கு வாக்களிக் கும்படி ஊக்குவித்ததை 2019இல் நாங்கள் நேரில் கண்டோம்.

அவிஜித் கோஷ் : இந்தியாவில் தங்களுக் கென்று ஓர் ஏகபோக ஆதிக்கத்தை உரு வாக்கிக் கொள்வதற்காக ஆர்.எஸ்.எஸ். மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு எதிராக எதிர்க் கட்சிகளால் என்ன செய்ய முடியும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

பத்ரி நாராயண் : எதிர்க்கட்சிகள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ்சுக்கு எதிரான குழுக் களால் விவாதங்கள் மூலமும், உரையாடல் மூலமும், எதிர்க்கருத்தை பெரிதாக்க முடியும். அதற்கு ஆர்.எஸ்.எஸ். மீதான தங்கள் புரிதலை முற்றிலும் திருத்திக் கொள்ள வேண்டி யிருக்கும்.

ஒரு மேலாதிக்கத்தையோ, அல்லது அதற்கு எதிரான போக்கையோ உருவாக்குவதில், பண்பாடு, பயன்படுத்தப் படும் அரசியல், மொழி ஆகியன முக்கியப் பங்கு வகிக்கின்றன. சமூகத்தின் மிகப் பெரும் மக்கள் குழுவிடம் வேகமாக வளர்ந்துள்ள ஹிந்துத்துவ மனோ பாவத்தைப் புரிந்து கொண்டு, மதச் சார்பின்மை போன்ற பழையதாகி விட்ட அரசியல் மொழி களைப் பற்றி மீண்டும் சிந்திக்கவும், புதிதாய் அரசியல் மொழியை உருவாக்கவுமான தேவை எதிர்க்கட்சிகளுக்கு இருக்கிறது.

நன்றி: ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ 28.3.2021

தமிழில்: .. பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment