ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 27, 2021

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி : “நான் ஒரு விவசாயிஎன அடிக்கடி கூறி மார்தட்டும் எடப்பாடி பழனிசாமி, தனது வேட்பு மனுவில்தனக்கு விளை நிலமே இல்லைஎன குறிப்பிட்டு இருப்பது எதனை காட்டுகிறது?

-வெங்கட.இராசா, .பொடையூர்.

பதில் : விளைநிலம் இல்லாதஅரசியல் விவசாயி”,  எப்போதும்முன் ஜாக்கிரதையோடுவிவசாயியாக இருப்பவர் என்ற சூட்சுமம் புரிகிறது!

கேள்வி : தமிழகத்தில் 28 சதவீதமாக இருந்த குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை கரோனாவுக்குப் பின்னர் 79.6 சதவீதமாக அதிகரித்துள்ளது எனகுழந்தை உழைப்பு எதிர்ப்புப் பிரச்சாரம்என்ற அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதே!

-சீ.இலட்சுமிபதி, தாம்பரம்.

பதில் : இது போன்ற வளரும் தலைமுறைகளின் வாழ்வாதாரத்தில், வரும் தி.மு.. அரசு  முதல் முன்னுரிமை கொடுத்து கண்காணிக்க வேண்டியது அவசரம் - அவசியம்.

கேள்வி:அய்.நா. சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காமல், வாக்கெடுப்பை புறக்கணித்தது ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகம் அல்லவா?

- வேலவன், வேளச்சேரி.

பதில் : பச்சைத் துரோகம்; இரட்டை வேடம் - வழக்கம் போல்! அவர்களை நம்பிய ஈழத்தமிழர்களின் போராளி நண்பர்களுக்கு இனியாவது புத்தி வந்தால் நல்லது!

கேள்வி : ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத 4 கோடி குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டதால் பட்டினிச்சாவு அதிகரித்துள்ளதாக உச்சநீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளதே - நீதிமன்றங்கள்  வருத்தம் தெரிவித்தால் போதும் என்று நினைக்கின்றனவா?

- இளையராஜா, பிலாக்குறிச்சி

பதில்: வருத்தம் முக்கியமல்ல; போதாது, திருத்தம் தான் முதல் தேவை. பட்டினிச்சாவிலிருந்து மக்களைக் காப்பாற்ற முன்வருதல் அவசியம் அல்லவா?

கேள்வி : சமூகநல ஆர்வலர்கள் மதுவிலக்கு வேண்டி போராடிக் கொண்டிருக்கும் சூழலில், மது அருந்தும் வயதை 25இல் இருந்து 21 ஆக டில்லி அரசு குறைத்திருப்பது இளைஞர்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்வது ஆகாதா?

- வேலாயுதம், வில்லிவாக்கம்.

பதில்: டில்லி அரசுக்குகுடிமக்கள் மீதுள்ள அபார கவலையின் வெளிப்பாடு!

கேள்வி :  இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி அல்லல்படும் அவலநிலையில், தெலங்கானா அரசு ஓய்வு பெறும் வயதை 61 ஆக நீட்டித்திருப்பது நாட்டில் வேலை வாய்ப்பின்மையை மேலும் அதிகரிக்கும் அல்லவா?

- கயல்விழி, காஞ்சிபுரம்.

பதில்: தமிழ்நாட்டை தெலங்கானா அரசு முந்த முயற்சிக்கிறது போலும்! மகா வேதனை!

கேள்வி: எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட .தி.மு.. தன்மானத்தையும், கொள்கைகளையும் இழந்து நிற்பதாக .தி.மு.. நிறுவன உறுப்பினர் கே.சவுந்தரராஜன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதைப் பற்றி தங்கள் கருத்து என்ன?

- அல்லிராணி, ஆரணி.

பதில்: நண்பர் கே.சவுந்தரராஜன்  இயல்பாகவே ஒரு பெரியாரிஸ்ட்பகுத்தறிவுவாதி - கொள்கை யாளர், அவர் தனது வேதனையை வெளியே கொட்டியுள்ளார்!

கேள்வி: இன்னும் எத்தனை காலத்திற்கு இட ஒதுக்கீடு என்று கேட்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பொருளாதாரத்தில் நலிவுற்ற உயர்ஜாதிப் பார்பனர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியபோது எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லையே ஏன்? 

- இல. சீதாபதி, மேற்கு தாம்பரம்.

பதில்: ‘அவாள்எங்கிருந்தாலும்அவாளேஎன்பதை நம்மவாள் புரிந்து கொண்டால் சரி.

கேள்வி: வட இந்தியர்களுக்கு தமிழ்நாட்டில் வீடு கட்டித்தரப்படும் என்று பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதே?

- .மரகதமணி, வியாசர்பாடி

பதில்: தமிழ்நாட்டில் தமிழ்நாட்டவரைச் சிறுபான்மையினராக்கும் சீரிய(ஸ்) முயற்சி - ‘ தாழ்ந்த தமிழகமேஎன்ற நிலை பா... காலூன்றினால் ஏற்படுவது உறுதி.

கேள்வி : கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் மூன்றரை லட்சம் காலியிடங்களை வைத்துக்கொண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு பணி தருவோம் என்று கூறுவது எப்படி உள்ளது.?

- தமிழ்மைந்தன், சைதாப்பேட்டை

பதில்: கோயபல்சின் குருநாதர்கள், மோசடி வியாபாரிகள் - எச்சரிக்கை.

No comments:

Post a Comment