பாஜக என்றாலே "பொய்" மூட்டைதானா?

மலையாள நடிகர் கிருஷ்ணகுமார் பாஜக சார்பில் பாலக்காடு  தொகுதியில் போட்டியிடுகிறார், பரப்புரையின் போது ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்குபசு நமது தாய். அதைப் பாதுகாப்பது இந்துக்களின் கடமை, பாஜக அதைச் செய்யும். நான் வெற்றி பெற்று சட்டமன்றம் செல்லும் போது வலியுறுத்துவேன்" என்று கூறினார்.

அதே நாளில் வெளியான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி யில் கிருஷ்ணகுமாரின் மகளும் பாடகியுமான அஹனா கிருஷ்ணா பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார். அதில் "எங்கள் வீட்டில் எங்கள் அப்பாவிற்கு வெறும் ரசம் சோறு கொடுத்தால் அதிகம் சாப்பிடமாட்டார், அது அவருக்குப் பிடிக்காது; ஆனால் மாட்டுக்கறி வறுவலைக் கொடுத்தால் போதும் - எக்ஸ்ட்ரா சோறு வாங்கி சாப்பிடுவார், எங்கள் வீட்டில் அனைவரும் மாட்டுக்கறி குழம்போடு, ஈரல் வறுவலை விரும்பிச் சாப்பிடுவோம்" என்று குட்டை உடைத்தாரே பார்க்கலாம்!

வீட்டுக்குள்ளேயே வெடித்தது உண்மை.

அந்தோ, பரிதாபம் பா...!

Comments