மத்திய அரசில் தி.மு.கழகம் பங்கேற்ற பத்தாண்டு காலத்தில் தமிழகம் பெற்ற பயன்கள் பாரீர்!

              பெண்களுக்கானச் சொத்துரிமைச் சட்டம் 2006இல்    நிறைவேற்றப் பட்ட அமைச்சரவையில் தி.மு.. இருந்தது.

               அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் தி.மு. பொறுப்பேற்றிருந்த காலத்தில்தான் தமிழ், 'செம்மொழி' என்று மத்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

               சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைந்தது.

               கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மூலம் 56ஆயிரத்து 664 கோடியே 21 இலட்சம் ரூபாய்செலவில், 4,676 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலைகளில், 3,276 கிலோ மீட்டர் சாலைகள், நான்கு வழிச்சாலைகளாக மேம்பாடு; மிகப்பெரிய மேம்பாலங்கள், துறைமுக விரிவாக்கப் பணிகள், சரக்குப் பெட்டக முனையங்கள், நீர்வழிப் போக்குவரத்து வசதிகள் அமைந்தன.

               சென்னைக்கருகில் ஒரகடத்தில் 470 கோடி ரூபாய் முதலீட்டில் மத்திய அரசின் தேசிய மோட்டார் வாகனச் சோதனை மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட வளர்ச்சிக் கட்டமைப்பு மய்யம் அமைத்தது.

               1553 கோடி ரூபாய்ச்செலவில் சேலம் உருட்டாலை பன்னாட்டு அளவுக்கு உயர்த்தப்பட்டு, புதிய குளிர் உருட்டாலை உருவாக்கம்.

               தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மய்யம்.

               சேலத்தில் புதிய இரயில்வே மண்டலம்.

               120 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் அரசினர் மோகன் குமார மங்கலம் மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையாக மேம்பாடு.

               1800 கோடி ரூபாய் திட்டமான சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே பறக்கும் சாலைக்கான துவக்கம். (.தி.மு. ஆட்சி தடை ஏற்படுத்தி வருகிறது)

               2427 கோடி ரூபாய் செலவில் சேது சமுத்திரத்திட்டப்பணிகள் தொடக்கம் (.தி.மு.கவால் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ள திட்டம்)

               நெசவாளர் சமுதாயத்தினர் பெரும் பயன் எய்திட சென்வாட் வரி நீக்கம்.

               908 கோடி ரூபாய்ச் செலவில் நெம்மேலியில் கடல்நீரைக் குடி நீராக்கும் மற்றொரு திட்டம்.

               பொடா சட்டம் ரத்து.

               அனைத்து கிராமங்களிலும் முழு கணினி நிர்வாகத்தை ஏற் படுத்தும் வகையில் தேசிய கணினி நிர்வாகத் திட்டம் அறிமுகம்.

               30 காசு செலவில் இந்தியா முழுவதும் தொலைபேசியில் பேசும் வசதி.

               மாதம் ஒன்றுக்கு 120 இலட்சம் புதிய தொலைபேசி இணைப்புகள்

               செல்போன் கட்டணங்கள் குறைப்பு.

               தமிழகத்திலுள்ள மீட்டர் கேஜ் இரயில் பாதைகள் அனைத்தும் அகல இரயில் பாதைகளாக மாற்றிட அனுமதி.

               1828 கோடி ரூபாய்ச் செலவில் 90 இரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கு அனுமதி.

               சென்னை மாநகரில் மெட்ரோ இரயில் திட்டம்.

               ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்

               திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம்.

               சென்னைக்கருகில் பன்னாட்டுத்தரம் வாய்ந்த கடல்சார் தேசிய பல்கலைக் கழகம்.

               திருவாரூரில் மத்திய பல்கலைக் கழகம்.

               திருச்சியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம்

               ஆசியாவிலேயே முதலாவதாக சென்னைக்கு அருகில் ஒன்றுக்கு மேற்பட்ட உடல் ஊனமுற்றோர்க்கான தேசிய நிறுவனம்.

               சென்னையில் மத்திய அதிரடிப்படை மய்யம் (என்.எஸ்.ஜி)

               இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளில், வங்கியில் பெற்றிருந்த ரூ.72,000 கோடி மதிப்பிலான கடனும் வட்டியும் மத்திய அரசால் தள்ளுபடி செய்யப்பட்டது.

               இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு பல நூறு கோடி ரூபாய் கல்விக் கடன் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் வழியாக வழங்கப்பட்டது.

               மத்திய அரசில் இடம் பெற்ற தமிழகத்தின் 13 அமைச்சர்களும் பல்வேறு செயல் திட்டங்களை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத் திற்காகவும் நிறைவேற்றி உள்ளனர். இந்திய அளவில் கடந்த காலங்களில் பெறமுடியாத அளவிற்குத் திட்டங்களின் மொத்த செலவுத் தொகையான ரூ.3,70,000 கோடியில் தமிழ்நாடு 11 விழுக்காட்டுப் பங்கினைப் பெற்றுள்ளது.

               இதுவரை தமிழ்நாடு பெறாத அளவுக்கு அதிக நிதியினைப்பெற்று தமிழ்நாட்டில் 69 மத்திய அரசுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

               தொலைத் தொடர்புத் துறையில் மத்திய அமைச்சராக இருந்த .ராசா (தி.மு.) செய்த புரட்சியின் காரணமாக இந்தியாவின் கடைக்கோடி குடிமகனுக்கும் மிகக் குறைந்த விலையில் செல்பேசி சென்று சேர்ந்தது. இதற்காக வன்மம் கொண்டு தன்மீது சுமத்தப் பட்ட இந்தியாவின் மாபெரும் ஊழல் என்ற போலிக்குற்றச்சாட்டை எதிர்க்கொண்டு நீதிமன்றத்தின் மூலமே உடைத்து நொறுக்கினார் .ராசா. இன்று இணைய வசதி இந்தியா முழுமையும் சென்றதற்கு மத்திய அமைச்சரவையில் திமுக செய்த சாதனைகளே காரணம்.

உங்கள் வாக்கு தி.மு..கூட்டணிக்கே!


Comments