இவர்தான் மாசில்லா மா.சு.

சைதைத் தொகுதி வேட்பாளர் மா.சு. என்ற மாசற்ற வேட்பாளர் - பகுத்தறிவாளர் - கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாதவர் - என்றும்இளைஞராக இருப்பவர் - மாரத்தான் போட்டி வீரர் - நாம் எல்லாம் இளைஞராக ஆக வேண்டுமானால், மா.சு.வுடன் ஓடலாமே என்று தோன்றுகிறது - எந்த நேரத்தில் அழைத்தாலும் ஓடோடிச் சென்று மக்கள் தொண்டு செய்யும் மகத்தான செயல்வீரர்!

அவரை வெற்றி பெறச் செய்வீர்!

- ஈக்காட்டுத்தாங்கல் பரப்புரையில்

தமிழர் தலைவர்

மா.சு.வின் நெகிழ்ச்சி

‘‘கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது இதே இடத்தில்தான் நமது ஆசிரியர் அவர்கள் பேசினார். 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன்.

இந்தத் தேர்தலிலும் இதே இடத்தில் இப்பொழுது ஆசிரியர் பரப்புரை செய்கிறார். இது எனக்குக் கிடைத்த பெரும் பேறு'' என்றார் சைதை தொகுதி தி.மு.. வேட்பாளர் மானமிகு மா.சுப்பிரமணியன்.

Comments