அறிவியல் சுற்றுவட்டப்பாதையில் அமீரகத்தின் ஹோப் விண்கலம் வெற்றிகரமாக நுழைந்தது

 துபாய், மார்ச் 31- செவ்வாய் கிரக பயண திட்ட இயக்குநர் ஒமரான் ஷரப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அமீரகத்தின்ஹோப்விண்கலம் வெற்றிகரமாகசயின்ஸ் ஆர் பிட்எனப்படும் அறிவியல் சுற்றுவட்டப்பாதையை அடைந்துள்ளது. இதற்காக அந்த விண்கலத்தில் உள்ள 6 திரஸ்டர் என்ஜின்கள் 8.36 நிமிடங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் இயக்கப்பட்டது.

அந்த நிமிடங்கள் மிகவும் சிக்கலானதாக இருந்தது. ஒருவேளை அந்த நேரத்தில் சரியாக திரஸ்டர்கள் இயக்கப்படவில்லை என்றால் விண்கலம் விண்வெளியில் தொலைந்து போகக்கூடும் சூழ்நிலை இருந்தது. இந்த திசை திருப்பும் முயற்சியில் கடைசியாக என்ஜின் இயக்கப்பட்டது மிகவும் சவாலானது. ஆனால் வெற்றிகரமாக செவ்வாயின் அறிவியல் சுற்றுவட்டப்பாதையைஹோப்விண்கலம் அடைந்தது சாதனைக்குரியது.

அந்த விண்கலம் தற்போது ஏற்கெனவே பயணம் செய்து கொண்டு இருந்த பிடிப்பு சுற்றுவட்டப்பாதையில் (கேப்சர் ஆர்பிட்) 1,063 கி.மீ-இல் இருந்து அதிகபட்சமாக 42 ஆயிரத்து 426 கி.மீ தொலை வில் பயணம் செய்து வந்தது. அறிவியல் சுற்றுவட்டப் பாதையில் நகர்ந்து கொண்டு இருக்கும்ஹோப்விண்கலம் குறைந்தபட்சமாக 20 ஆயிரம் கி.மீ தொலைவில் இருந்து அதிகபட்சமாக 42 ஆயிரத்து 461 கி.மீ தொலைவில் பயணம் செய்து ஆய்வு செய்ய உள்ளது.

அடுத்த மாதம் (ஏப்ரல்) 14-ஆம் தேதி முதல் பல்வேறு அறிவியல் ஆய்வுகளைஹோப்விண்கலம் தொடங்க உள்ளது. அறிவியல் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்துள்ளஹோப்விண்கலம் செவ்வாய் கிரகத்தில் நில அதிர்வு ஏற்பட்டசெர்பெரஸ் போசேஎன்ற பகுதியை மிக தெளிவாக படம் பிடித்து விண்வெளி கட்டுப்பாட்டு மய்யத்திற்கு அனுப்பியுள்ளது.

இந்த படத்தில் நில அதிர்வு ஏற்பட்ட பகுதியானது விரிசல் விட் டது போன்று கோடுகளாக காட்சியளிக்கிறது. அறிவியல் சுற்றுவட்டப் பாதையில் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு தகவல்களைஹோப்விண்கலம் சேகரிக்க உள்ளது. இந்த விண்கலம் சேகரிக்கும் தகவல் கள் அனைத்தும் வரும் அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் பகிர்ந்து அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஏப்ரல் மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை உயரும்

எரிசக்தி அமைச்சகம் அறிவிப்பு

அபுதாபி, மார்ச் 31-  அமீரகத்தில் ஏப்ரல் மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை உயரும் என்று எரிசக்தி அமைச்சகம் அறிவித்துள்ளது.

அமீரக எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அமீரக அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வழங்கி வந்த மானியம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து ஒவ் வொரு மாதமும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது பன்னாட்டு சந்தை விலை நிலவரத்துக்கு ஏற்ப அறிவிக்கப்பட்டு வருகிறது. அமீரக எரிசக்தி அமைச்சகம், பெட்ரோல் நிறுவன உயர் அதிகாரிகளுடன் ஒவ்வொரு மாத இறுதியிலும் சந்தித்து பேசி அதன் அடிப்படையில் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சூப்பர் 98 பெட்ரோல் விலையானது லிட்டர் ஒன்றுக்கு 2.12 திர்ஹாமில் இருந்து 2.29 திர்ஹாம் ஆக அதிகரித்துள்ளது. சூப்பர் 95 பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 2.01 திர்ஹாமில் இருந்து 2.17 திர்ஹாம் ஆக அதிகரித்துள்ளது. பிளஸ் பெட்ரோல் விலையானது லிட்டர் ஒன்றுக்கு 2.10 திர்ஹாம் ஆக இருக்கும். டீசல் விலையானது லிட்டர் ஒன்றுக்கு 2.15 திர்ஹாமில் இருந்து 2.22 திர்ஹாம் ஆக அதிகரித்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது அடுத்த மாதம் (ஏப்ரல்) சிறிது அதிகரிக்க இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலையானது வாட் வரியுடன் கூடியது ஆகும். இந்த விலை உயர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 1ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வரும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments