எண்ணெய்க் கசிவை தடுக்கும் உயிரி தொழில்நுட்ப வடிகட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 25, 2021

எண்ணெய்க் கசிவை தடுக்கும் உயிரி தொழில்நுட்ப வடிகட்டி

கச்சா எண்ணெய், நீருடன் கலந்து விட்டால், இரண்டையும் பிரிப்பது கடினம். இதனாலேயே, கடலில் இது போன்ற விபத்துக்கள் நேர்ந்தால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மிகவும் கவலைப்படுவ துண்டு.

அவர்கள் கவலையைப் போக்க, சில பாக்டீரியாக்கள் உதவக்கூடும்.

அமெரிக்காவிலுள்ள, வடக்கு கரோ லைனா மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்கள், ஒரு உயிரி தொழில்நுட்ப வடிகட்டியை உருவாக்கியுள்ளனர், அது, நீரை மட்டும் வெளியேவிட்டு, கச்சா எண்ணெயை பிரித்துத் தடுத்துவிடும் திறன் கொண்டது.

ஆராய்ச்சியாளர்கள், சில வகை பாக்டீரியாக்களை அடையாளம் கண்டு உள்ளனர். இந்த பாக்டீரியாக்களை வடி கட்டிகளில் பயன்படுத்தும்போது, அவை, கச்சா எண்ணெயை உடனடியாக வடிகட்டி விடுகின்றன. நீரை மட்டும் வெளியேற்றிவிட்டன.

இந்த கண்டுபிடிப்பு, கடலில் எண் ணெய் கப்பல்களில் கசிவு ஏற்படும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment