உலை சிறிது: உற்பத்தி பெரிது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 25, 2021

உலை சிறிது: உற்பத்தி பெரிது

"நாட்ரியம் தொழில்நுட்பம், 2030இல் தான் நடைமுறைக்கு வரும். ஆனால், அது அணு ஆற்றலை மூலமாக கொண்டது. அதை முன் மொழிவோரில் பில்கேட்சும் ஒருவர். எனவே தான் அதற்கு இப்போதே கவன ஈர்ப்பு கிடைத் துள்ளது.

சிறிய, மலிவான, அணு உலைகளை நிறுவி, மின் உற்பத்தி செய்வது வருங்காலத்தில் மின் தட்டுப்பாட்டை நீக்கும் என பில்கேட்ஸ் நம்புகிறார்.

இதற்கென அவரது நிதி முதலீட்டுடன் இயங்கும் 'டெர்ராபவர்' மற்றும் 'ஜி..-ஹிட்டாச்சி' அணு ஆற்றல் நிறுவனம் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ள, நாட்ரியம் என்ற சிறு அணு மின் ஆலை தொழில்நுட்பத்திற்கு, அமெரிக்க ஆற்றல் துறை ஒரு பெரிய நிதியை வழங்கியுள்ளது.

அந்த நிதியைக் கொண்டு நாட்ரியம், ஒரு சிறு ஆலையை நிறுவி, தொழில்நுட்பத்தின் திறனை உலகிற்கு பறைசாற்றும். நாட்ரியம், அணுப் பிளவு மூலம் உண்டாகும் வெப்பத்தை வைத்து, நீராவி டர்பைன்களை இயக்கி மின் உற்பத்தி செய்யும். அணுப் பிளவின் போது கிடைக்கும் உபரி வெப்பத்தை திரவ உப்பை ஊடகமாகக் கொண்டு சேமித்து வைக்கிறது. பிறகு, மின் தட்டுப்பாடு ஏற்படும்போது திரவ உப்பிலுள்ள வெப்பத்தை கொண்டு உடனடியாக மின்சாரத்தை உற்பத்தி செய்து விட முடியும்.

செர்னோபில் முதல் புகுசிமா வரை பல விபத்துகளையும் தாண்டி, அணு உலை பாது காப்பானதே என வல்லுனர்கள் கூறுகின்றனர். நிலக்கரி, எண்ணெய் எரிசக்தியால் உற்பத்தியாகும் ஒரு டெராவாட் மின்னாற்றலுக்கு, முறையே, 24.6 மற்றும் 18.4 மனித உயிர்கள் பலியாகின்றன. ஆனால், அணு மின்னாற்றலை உற்பத்தி செய்ய, 0.07 அளவே மனித உயிர்கள் மாண்டு உள்ளன.தவிர, காற்றாலை, நீர் மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம் என்று அனைத்திற்குமே பெருமளவு நிலப் பரப்பும், இயற்கை வள விரயமும் ஆகின்றன. ஆனால் ஒரு சிறிய அணு உலைக்கு சில பெரிய கட்டடங்கள் அளவு இடம் போதும். ஆக, 2030 வாக்கில் சிறிய அணு மின் ஆலைகள் சகஜமாகிவிடும் போலத் தெரிகிறது.

No comments:

Post a Comment