வருகிறது விண்வெளி விடுதி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 25, 2021

வருகிறது விண்வெளி விடுதி!

 இன்னும் அய்ந்தே ஆண்டுகளில், விண்வெளியில் அந்த விந்தை நடக்கும் என்கின்றனர். அதாவது, அமெரிக்காவை சேர்ந்த ஆர்பிட்டல் அசெம்பிளி என்ற நிறுவனம், விண்வெளி விடுதி ஒன்றை 2026 வாக்கில் திறக்கத் திட்டமிட்டுள்ளனர். ரூ.36.5 கோடி பயணக் கட்டணம் செலுத்தினால், மூன்றரை நாட்களுக்கு விண்வெளியில் சுழலும் விடுதியில் தங்கலாம்.

'வாயேஜர்' என பெயரிடப்பட்டுள்ள இந்த விடுதி, 700 அடி சுற்றளவுள்ளது. நிலாவில் இருக்கும் ஈர்ப்பு விசையின் அளவுக்கு, இந்த விடுதிக்குள் ஏற்படுத்த, அதை விரைவாக சுழலும்படி செய்ய விருக்கின்றனர்.இந்த விண்வெளி நிலையத்தில் 100 பேர் இருப்பர். இது போக, 300 விண்வெளி சுற்றுலா பயணிகளையும் வரவேற்கும் திறன் வாயேஜர் நிலையத் திற்கு இருக்கும்.

பணம் படைத்தவர்கள், சாகச உணர்வு உள்ளவர்கள் மட்டுமல்லாமல், விஞ்ஞானிகளையும் இந்நிலையம் விருந்தினர் களாக அழைக்கவிருக்கிறது.

இந்த நிலையத்திற்கு தேவையான மின்சாரம் பூமியிலிருந்து கம்பியில்லா தொழில்நுட்பம் மூலம் அனுப்பப்படும். இங்கு இருப்போருக்குத் தேவையான உணவு, உடை போன்றவையும் பூமியி லிருந்து விண்கலன்கள் மூலம் எடுத்து வரப்படும்.

No comments:

Post a Comment