பசுவதை தடுப்புச்சட்டம், மதமாற்ற தடைச்சட்டம், கோவில் நிலங்கள் ஹிந்துக்களுக்கு மட்டுமே: சிரிப்பு தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 25, 2021

பசுவதை தடுப்புச்சட்டம், மதமாற்ற தடைச்சட்டம், கோவில் நிலங்கள் ஹிந்துக்களுக்கு மட்டுமே: சிரிப்பு தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக

 சென்னை, மார்ச். 25- தமிழக சட்டசபை தேர்தலில் போட் டியிடும்  பாஜக வெளியிட்டு இருக்கும் தேர்தல் அறிக்கை கல்வியில் பின் தங்கிய வட மாநிலங்களுக்கு கொடுக்கும் அதே உத்தரவாதங்களை இங்கும் தந்துள்ளது,

இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்க வேண்டும், ஒரே மாதிரியான சட்டங்களை கொண்டு வர வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. பாஜக ஆட்சியை பிடிக்கும் மாநிலங்களில் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சட்டங்கள், தடைகள் கொண்டு வரப்படு கின்றன.

இந்த நிலையில் தமிழகத் திலும் மாற்றமில்லாமல் துணிச்சலாக பாஜக சில அறிவிப்புகளை வெளியிட்டுள் ளது. 22.3.2021 அன்று பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இருக்கும் சில முக்கிய விடயங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. பசுவதை தடை சட்டம் பாஜகவின் தேர்தல் அறிக்கையின்படி தமிழகத்தில் பசு வதைத் தடைச்சட்டம் அமல் படுத்தப்படும். அதாவது இனி உணவகங்களில் மாட்டுக்கறி சாப்பிட தடை விதிக்கப்படும். அதோடு பசு ஏற்றுமதி தடை செய்யப்படும், மீட்கப்படும் பசுக்களுக்கு கோவில்களில் கோசாலைகள் அமைத்துப் பாதுகாக்கப்படும். உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங் களில் இருக்கும் சட்டத்தை தமிழகத்திலும் கொண்டு வருவதாக பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. அதோடு ஹிந்துக்களின் வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகம் அர சிடமிருந்து தனியே இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப் படும்.

அரசிடம் இருந்து ஹிந் துக் கோவில்களை மீட்க வேண்டும் என்று ஜக்கிவாசு தேவ் என்ற கோவை கார்ப்ப ரேட் சாமியார்  சமீப நாட்க ளாக குரல் கொடுத்து வரு கிறார். இதை முன்னிட்டு பாஜகவும் தேர்தல் அறிக் கையில் குறிப்பிட்டுள்ளது.  வெளிமாநிலத் - தொழிலாளர் களுக்கு குடியிருப்பு -வசதிகள் செய்துதரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்படி தமிழகத்தில் இருக்கும் வடஇந்திய ஊழி யர்கள் சொந்த வீடுகளை பெறுவார்கள். அவர்கள் இங் கேயே தங்கி வாக்கு அளிக்க முடியும். இவர்களின் வாக்கு வங்கியை கவரும் வகையில் பாஜக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆதி திராவிடர் நலத்துறை என் பது பட்டியலின மக்கள் நல் வாழ்வுத்துறை என பெயர் மாற்றம் செய்யப்படும், என் றும் பொருளாதாரரீதியாக நலிவடைந்தவருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப் படும் என்றும், தேசிய கல்விக் கொள்கை முழுமையாக அமல்படுத்தப்படும் என்றும் பாஜக கூறியுள்ளது. இது மூன்றுமே பெருவாரியான தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்த திட்டங்கள் ஆகும்.

 பள்ளிப் பாடத்திட்டத்தில் தேவாரம், திருவாசகம்,நாலாயிர திவ்யப் பிரபந்தம் போன்ற ஆன்மீக நூல்கள் சேர்க்கப் படும். மாணவர்கள் பிற மொழி கள் படிக்க விரும்பினால் அவர்களுக்கு தனி வகுப்புகள் ஏற்படுத்தப்படும். என்று கூறப்பட்டுள்ளது. 

கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டு வரப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது. தமிழகத்தில் மதம் மாறுவது தடை செய் யப்படும். அதோடு ஹிந்துக் கோவில் நிலங்கள் ஹிந்து அல்லாதவருக்கு வாடகைக்கு, குத்தகைக்கு விடப்படாது என்று அறிவிக்கப்பட்டுள் ளது.  வடமாநிலத்தில் உள்ள வர்களைப் போன்றே தமிழ் நாட்டிலும் இருப்பார்கள் என்று நினைத்து இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment