கடல் குப்பையை கண்டறியும் மென்பொருள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 25, 2021

கடல் குப்பையை கண்டறியும் மென்பொருள்!

பிளாஸ்டிக் மீதான தடைகள் போடப்பட்டாலும், தினமும் பல லட்சம் டன் பிளாஸ்டிக் குப்பை கடலில் கலந்து வருகின்றது. இதனால், உலகக் கடல் பரப்பில், எங்கே, எவ்வளவு பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து வருகின்றன என்பதை கண்டுபிடிப்பதே கடலியல் வல்லுநர் களுக்கு பெரும் சவாலாக உள்ளது.

அவர்களுக்கு உதவும் வகையில், கடலின் மேற்பரப்பை விமானத்திலிருந்து படம் பிடித்து தந்தால், அதை அலசி, பிளாஸ்டிக் கழிவுகள் மிதக்கும் பகுதிகளை துல்லியமாக கணித்து தரும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

ஸ்பெயினின் பார்சிலோனா பல் கலைக்கழக விஞ்ஞானிகள், கடலோ னியா கடற்கரை பகுதிக்கு அப்பாலுள்ள, கடல் பரப்பின் புகைப்படங்களை சேகரித்தனர். அவற்றில், பிளாஸ்டிக் கழிவுகள் மிதக்கும் படங்களை அடை யாளம் கண்டறிய, செயற்கை நுண்ண றிவு மென்பொருளுக்கு பயிற்சி தந்தனர்.

இதற்கு பின், அந்த மென்பொருளே துல்லியமாக கடலின் மேற்பரப்பு படங் களை பார்த்து அலசி, குப்பை மிதக்கும் பகுதிகளைக் கண்டறிந்து சொல்ல துவங்கியது. இத்தொழில்நுட்பம், கடலை சுத்திகரிக்க, நேரடியாக படகில் கிளம்பும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment