மத்திய பா.ஜ.க. அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் போராட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 25, 2021

மத்திய பா.ஜ.க. அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் போராட்டம்!

 ரூ.815 கோடி சுங்கச்சாவடிக்கட்டணம் இழப்பாம்

புதுடில்லி, மார்ச் 25- டில்லி விவசாயிகள் போராட்டம் காரணமாக மூன்று மாநிலங்களில் 815 கோடி ரூபாய் சுங்கக் கட்டண இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 117 நாட்களாக அரியானா, உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டில்லி எல்லைகளான சிங்கு, டிகிரி, காசிப்பூரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களின் மூலம்  நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்பது குற்றச் சாட்டாகும்.

போராட்டத்தைமுடிவுக்கு கொண்டு வர விவசாயிகள் சங்கத்தின ருக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த 11 சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் டில்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் காரணமாக மூன்று மாநிலங்களில் 815 கோடி ரூபாய் சுங்கச்சாவடிக் கட்டணம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பரில் இருந்து மார்ச் மாதம் வரை இந்த சுங்கச்சாவடி கட்டண இழப்பு ஏற்பட்டதாக மாநிலங் களவையில் மத்திய சாலைப் போக்கு வரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசியதாவது, 'நெடுஞ்சாலையில் விவசாயிகள் போராட்டம் செய்வதால் இந்த இழப்பு ஏற்பட்டுள் ளது. பஞ்சாப்பில் அதிகமாக 487 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அரியா னாவில் 326 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் 1.4 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

 விவசாயப் போராட்டம் காரணமாக வேறு மாநிலங்களில் இழப்பு ஏற்பட வில்லை.

சுங்கச்சாவடி வருவாய் இல் லாமல் இந்த 3 மாநிலங்களில் மட்டும் சாலை போக்கு வரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது,' என்றார்.

No comments:

Post a Comment