இந்தியாவில் தனியார் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 276 - மத்திய அரசு தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 25, 2021

இந்தியாவில் தனியார் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 276 - மத்திய அரசு தகவல்

புதுடில்லி,மார்ச் 25 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே எழுத்துப்பூர்வ மாக பதில் அளித்தார்.

அந்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்திய மருத்துவ சங்கம் (அய்.எம்..) என்பது பதிவு செய்யப்பட்ட ஒரு தனியார் அமைப்பு ஆகும். இந்த சங்கத் துக்கு மருத்துவ க் கல்லூரிகளை ஆய்வு செய்ய அதிகாரம் இல்லை. நாட்டில் மருத்துவ கல்வியை ஒழுங்குபடுத்துவதற் காக கடந்த 1956ஆம் ஆண்டு இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.அய்.) உருவாக்கப் பட்டது.

இது தற்போது தேசிய மருத்துவ ஆணையமாக (என். எம்.சி.) மாற்றப்பட்டு இருக் கிறது.

தேசிய மருத்துவ ஆணைய தகவலின்படி நாட்டில் மொத் தம் 276 தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்ளன.

அதிகபட்சமாக கருநாடகத்தில் 42 கல்லூரி களும், மராட்டியத்தில் 34 கல்லூரிகளும், உத்தரப் பிரதேசத்தில் 31 கல்லூரிகளும், தமிழகத்தில் 27 கல்லூரிகளும் உள்ளன. 2014ஆம் ஆண்டுக்கு பிறகு 82 தனியார் மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

2021- - 2022ஆம் ஆண்டில் 37 புதிய கல்லூரிகள் தொடங்க விண்ணப்பங்கள் வந்துள்ளன.

இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment