கம்பியின்றி மின்சாரம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 25, 2021

கம்பியின்றி மின்சாரம்!


வீடு, அலுவலகங்களில், மின்னணு சாதனங்களின் ஆக்கிரமிப்பு வந்து பல ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனாலும் அவற்றுக்கு மின் இணைப்பு தர பல அடி மின் கம்பிகள் தேவைப்படு கின்றன. இதை தவிர்க்கவே முடியாதா? முடியும் என்று காட்டியிருக்கிறது, ரஷ்யாவை சேர்ந்த, 'ரீசோனன்ஸ்!' முதல் கட்டமாக, வீட்டிலுள்ள தொலைக்காட்சி பெட்டிக்கு மின் கம்பியை அறுத்து வீசியிருக்கிறது ரீசோனன்ஸ். எப்படி? கம்பியில்லா மின்சாரத் தொழில்நுட்பத்தை வீட்டுத் தொலைக்காட்சிக்கு அது கொடுத்திருக் கிறது.

தொலைக்காட்சிப் பெட்டியுடன் ஒரு மின் வாங்கிக் கருவி இணைக்கப்படுகிறது. இதற்கு மின்சாரத்தை ஒரு மின் அனுப்பி, காந்த அலைவரிசை வடிவில் அனுப்புகிறது. அனுப்பிக்கும், வாங்கிக்கும் இடையே, 50 செ.மீ., இடைவெளி இருக்கலாம். மின் அனுப்பி செலுத்தும் மின்சாரத்தில், 90 சதவீதத்தை மின் வாங்கி பெற்றுக் கொண்டு, தொலைக்காட்சியை இயக்குகிறது. அனுப்பி, வாங்கி ஆகிய இரு கருவிகளும் தற்போது சற்று பெரிதாக இருந்தாலும், விரைவில், அவற்றை தொலைக்காட்சிக் குள்ளேயும், சுவர்களிலும் பதிக்கும்படி தயாரிக்கப் போவதாக ரீசோனன்சின் ஆராய்ச்சி யாளர்கள் அறிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment