தமிழ் நாட்டில் தேர்தல் வேட்பாளர் பட்டியல் இந்தியிலா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 16, 2021

தமிழ் நாட்டில் தேர்தல் வேட்பாளர் பட்டியல் இந்தியிலா?

சமீபத்தில் தமிழ்நாட் டுக்குத் தேர்தல் நோக் கத்தில் சுற்றுப்பயணம் வந்த, பிரதமர் மோடி, ஒவ்வொருக் கூட்டத் திலும், திருவள்ளுவர், அவ்வையார்பாரதியார் என்று கூறிக்கொண்டு அவர்கள் எழுதிய கவிதைகளைத் தப்பும் தவறுமாகப் படித்துத் தீர்த்தார்.

 உள்துறை அமைச்சர் அமித்ஷா தான் தமிழ்க் கற்றுக்கொள்ள விரும்புவதாகவும் உங்கள் முன் அழகிய தமிழ் மொழியை பேசமுடியாமல் போனது குறித்து வருந்துவதாகவும் குறிப்பிட்டார்.  ஆனால்,  தமிழ் நாட்டுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் தமிழில் இல்லை. மாறாக  ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மீது பாசிச பாஜக கட்சி கொண்டுள்ள வெறுப்பு மற்றும் எதிர்ப்பு நிலையை நன்றாகவே உணர்த்தியுள்ளனர். இப்படிப்பட்ட கட்சியைத் தமிழர்கள் தண்ணீர் காட்டுவர்!   தேர்தலில் பாடம் புகட்டுவர்!

 கன்னியாகுமரி தொகுதியில் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று கூறி அங்குள்ள  ஊடகவியலாளர்களிடம் இந்தி  செய்தி அறிக்கையை (பிரஸ் ரிலீசைக்) கொடுத்து 'இந்தியிலேயே போடுங்கள், மக்கள் புரிந்து கொள்வார்கள்' என்று பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் சிடி ரவி கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment