கொள்கை கூட்டணிக்கும் - கொள்கையற்ற கூத்தணிக்கும் இடையே போட்டி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 28, 2021

கொள்கை கூட்டணிக்கும் - கொள்கையற்ற கூத்தணிக்கும் இடையே போட்டி!

விருத்தாசலம் தொகுதியில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரை

விருத்தாசலம், மார்ச் 28 கொள்கைக் கூட்ட ணிக்கும் - கொள்கையற்ற கூத்தணிக்கும் இடையே போட்டி என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் விருத்தாசலம் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களை ஆதரித்து விருத்தாசலம் வானொலி திடலில் நேற்று (27.3.2021) நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வன் வரவேற்புரை வழங்கிட, மண்டல தலைவர் அரங்க.பன்னீர்செல்வம், மாவட்ட அமைப்பாளர் வை.இளவரசன், மேனாள் மாவட்ட செயலாளர் முத்து.கதிரவன், நகர தலைவர் நா.சுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினர் தங்க.இராசமாணிக்கம், ஒன்றிய தலைவர் கி.பாலமுருகன், ஒன்றிய செய லாளர் நா.குமரேசன், நகர செயலாளர் தா.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடக்கத்தில் மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந் திரசேகரன் ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

அவர் தமது உரையில் கூறியதாவது:

எனது அன்பு நண்பர் குழந்தை தமிழரசன் இன்று நம்மிடையே இல்லை. எத்தனையோ பேரை இந்த கரோனாவில் நாம் இழந்திருக்கிறோம். இந்தக் கொடுமையான கரோனா சூழலில் நாம் இங்கே கூடியிருக்கிறோம். ஏனென்றால் கரோனாவை விட கொடுமையான ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் நுழைந்து விடக்கூடாது என்பதற்காகத்தான்.

கூட்டணியல்ல - கூத்தணி!

இந்தத் தேர்தலில் மே 2 ஆம் தேதிக்குப் பிறகு வெற்றி பெற்று கோட்டையில் அமரக்கூடியவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்கள் தான் என்று நாங்கள் ஆசைப்படுவதை விட பொதுமக்கள் முடிவு செய்து விட்டார்கள்.மிகப்பெரிய வெற் றியை பெறப்போவது இந்த கூட்டணி தான். அதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து அதன் மூலம் உருவானதுதான் இந்த கூட்டணி - கொள்கைக் கூட்டணி. அந்தக் கூட்டணியிலோ சேர்ந்த மூன்று மணிநேரத்தில் வேட்பாளராக முடிகிறது. இதுதான் அந்தக் கூட்டணியின் நிலை. அது கூட்டணி அல்ல - கூத்தணி!

மத்திய அரசு சொன்னதற்கெல்லாம் தலையை ஆட்டிவிட்டு நாங்கள் எதை விட்டுக் கொடுத்தோம் என்று முதல்வர் கேட்கிறாரே - நீட் தேர்வுப் பிரச்சினை ஒன்று போதாதா? கூலித் தொழிலாளியின் பிள்ளை அனிதா அந்த குழந்தை முகத்தை மறக்க முடியுமா? எழுவர் விடுதலை தொடர்பாக உங்களது நிலை என்ன? அதற்கு அனைத்துத் தரப்பும் ஆட்சேபனை இல்லை என்று சொல்லி விட்டனரே! அதற்குப் பிறகும் நாங்களும் ஈழத்தமிழர்க்கு ஆதரவாக இருக்கிறோம் என்று சொல்கிறீர்களே! வெட்கமில்லையா? .தி.மு.. வினரும் கூட தி.மு.. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் உங்களது கட்சி மீட்கப்படும்.

எனவே, உங்கள் தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் எளிமையானவர், பண்பாளர். அவருக்குக் கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய் யுங்கள் என்று  தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

பரப்புரைக் கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் .சீ.இளந்திரையன், அரியலூர் மாவட்டத் தலைவர் நீலமேகம், விழுப்புரம் மாவட்ட செயலாளர் பரணிதரன், தி.மு.. மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் கணேஷ்குமார், .வா.. நகர செயலாளர் சேகர், ...மாவட்ட துணை செயலாளர் செரீப், .பு.மா.கட்சி மாவட்ட செயலாளர் கோகுல் ஸ்டீபன், வி.சி..நகர செய லாளர் முருகன், சி.பி.எம்.அசோகன், சி.பி.அய் நகர செயலாளர் விஜய் பாண்டியன், மருத்துவர் சங்கவி முருகதாஸ், வி.சி..தொகுதி செயலாளர் அய்யாயிரம், விருதை வடக்கு ஒன்றிய தி.மு.. செயலாளர் கோவிந்தசாமி, தி.மு‌..நகர செயலாளர் தண்டபாணி, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞரணி தலைவர் சிலம்பரசன் நன்றி கூறினார்.

பரப்புரைக் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், பெரியார் வீர விளையாட்டு கழகத் தலைவர் பேரா..சுப்பிரமணியம், மாநில மாணவர் கழக செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார், அமைப்பு செயலாளர் மதுரை செல்வம், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டி, தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment