ஊழலற்றதா ‘நீட்?'

நீட்' என்பது ஊழலை ஒழிக்கக் கூடியது - உண்மை யான திறமையைக் கண் டறிவது என்று எல்லாம்உதார்' விடுகிறார்கள் அல் லவா! அது உண்மையா?

நாடாளுமன்றத்தில் - மக்களவையில்நீட்' தேர்வு தொடர்பாக தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் மக்களவை உறுப்பினர் பூர்ரா நர்சையா கவுட் என்பவர் - சில கேள்விகளை எழுப்பி னார்.

(1) மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தேர்வினை நடத்தும்புரோ மெட்ரிக்' எனும் அமெரிக்க நிறுவனம்நீட்' தேர்வு தொடர்பான மென்பொரு ளைக் கையாட முடியும் என்று ஒப்புக் கொண் டுள்ளதா?

(2) மருத்துவ மேற்படிப் புக்கானநீட்' தேர்வுக்கான மென்பொருள் கையாடப் பட்டதா? ஆம் எனில் விசாரணை நிலவரம் மற்றும் குற்றவாளிகள்மீது மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

(3) ஆம் எனில் மத்திய தேர்வுக் குழுமம்  நடத்தும் தேர்வுகளை நடத்திடப் பொறுப்பேற்கும் நிறுவனம் அல்லது முகவர் மேலும் சிலருக்கு உள் ஒப்பந்தம் செய்ய முடியுமா?

(4) ஆம் எனில் இதன் விவரங்களும், காரணங்க ளும் என்ன?

இக்கேள்விகளுக்கு மத்திய மனித வளத் துறை யின் இணை அமைச்சர் டாக்டர் சத்யபால் சிங் மக்க ளவையில் அளித்த பதில் வருமாறு:

‘‘மத்திய சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறையில் இருந்து தகவல்கள் பெறப் பட்டன; மத்திய தேர்வுக் குழுமம்நீட்' தேர்வு நடத் துவதற்கான அதிகாரப்பூர்வ அமைப்பு. இந்த அமைப்பு மத்திய சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறையின் கட் டுப்பாட்டில் உள்ளது. 2017 ஆம் ஆண்டுக்கான மருத் துவ மேற்படிப்பில் சேருவ தற்கானநீட்' தேர்வை அமெரிக்க நிறுவனமான புரோ மெட்ரிக் நிறுவனம் நடத்தியது.

நீட்' தேர்வு தொடர்பான தங்களது மென்பொருள் அமெரிக்க நிறுவனமான புரோ மெட்ரிக் நிறுவனத்து டன் நடைபெற்ற தொலை பேசி உரையாடலில் தங் களின் மென்பொருள் கையா டப்பட்டதை அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டது'' என்று மத்திய அமைச்சர் சொன் னாரே!

இதுதான் ஊழலை ஒழிக்கும் இலட்சணமா?

உண்மையான திறமை யைக் கண்டுபிடிக்கும் யோக் கியதையா?

இந்த ஊழலால் பயன டைந்தோர் யார்? பாதிக் கப்பட்டோர் யார்?

என்ன பரிகாரம்?

இந்தநீட்' தேர்வு தொட ரும் - கண்டிப்பாக நடத் தப்படும் என்று பா... தன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நீட்'டை ஒழிக்க பா...வை ஒழிக்கவேண் டமா?

சிந்திப்பீர்!

 - மயிலாடன்

Comments