சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராகப் போராட்டம்

புதுடில்லி, மார்ச்3- பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்து வருகிறதுஇந்த நிலையில், சமையல் எரிவாயு உருளையின் விலையும் உயர்ந்துள்ளது.

மானியமில்லா சமையல் எரிவாயு உருளை ஒன்றின் விலை கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி மெட்ரோ நகரங்களில் ரூ.25 உயர்ந்தது.  இதனை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி அறிவித்தன.  தொடர்ந்து அந்த மாதத்தில் மற்றொருமுறை விலை உயர்வு அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் தலைநகர் டில்லியில், மகளிர் காங்கிர சார் சாலையில் சமையல் செய்தும், இளைஞர் காங்கிர சார் சட்டைகளை கழற்றி போராட்டம் நடத்தியும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி னர்.

காங்கிரஸ் ஆளும் ராஜஸ் தான் மற்றும் பா... ஆளும் மத்திய பிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100அய் கடந்து விற்பனை யானது.  இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந் தனர்.

எரிபொருள் விலை உயர்வு பற்றி மத்திய பெட் ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தி யாளர்களிடம் கூறும்பொ ழுது, பன்னாட்டு சந்தையில் எரிபொருள் உற்பத்தி குறைந் துள்ளது.  எரிபொருள் உற் பத்தி செய்யும் நாடுகள் அதிக லாபம் ஈட்டுவதற்காக குறை வான அளவில் எரிபொருளை உற்பத்தி செய்கின்றன.

இதனால் நுகர்வோர் நிலையில் உள்ள நாடுகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.  தேவை அதிகரித்த சூழலில் விலை உயர்வும் அதிகரித்து உள்ளது.  குளிர்காலத்தில் விலை உயர்வு காணப்படு கிறது.  குளிர்கால பருவம் முடிந்ததும் விலை குறையும் என கூறினார்.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பெட் ரோலிய அமைச்சகம் முன் இளைஞர் காங்கிரசார் நேற்று (2.3.2021) போராட்டம் நடத்தினர்.  அமைச்சகத்தின் அலுவலகம் முன் திரண்ட நூற்றுக்கணக்கான காங்கிர சார் கைகளில் பதாகைகளை ஏந்தியபடியும், மத்திய அர சுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடியும் இருந்தனர்.

Comments