அன்று சொன்னவர் யார்?

 ‘‘கிரிக்கெட்டைப்பற்றிப் பேச நேரமுள்ள வேளாண்மைத் துறை அமைச்சர் சரத்பவாருக்கு உயிரை மாய்த்துக் கொள்ளும் விவசாயிகளைக் காப்பாற்ற நேரமில்லை!''

- சொன்னவர் யார்?

இன்றைய பிரதமர் மோடி, 2014 ஏப்ரலில் மகாராட்டிராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது உதிர்த்த நெ(சொ)ல் மணிகள்.

இன்று இந்தியாவின் தலைநகரமான டில்லியில் என்ன நடக்கிறது?  உலக வரலாறு கண்டிராத நூறு நாள்களையும் கடந்த விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. விவசாயிகள் மரணமும் தொடர்கிறதே!

ஒரே ஒருமுறை விவசாயிகளின்  பிரதிநிதி களைச் சந்தித்துப் பேசியதுண்டா பிரதமர் நரேந்திர  மோடி? விவசாயப் பெருங்குடி மக்களே உங்கள் கோபத்தை வாக்குச் சீட்டுமூலம் காட்டுவீர்!

Comments