மூடத்தனம் =பா.ஜ.க. பா.ஜ.க. தலைவர்கள் நடத்தும் பரிகார பூஜை

 ‘யாராவது கட்சிக்கு பில்லி, சூனியம் வைத்துவிட்டனரா' என, பா.., மூத்த தலைவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

பா..., - எம்.பி., மற்றும் எம்.எல்..,க் கள் சிலர், சமீபத்தில் அகால மரணம டைந்தனர். அமித்ஷாவிற்கு நெருக்க மான குஜராத் எம்.பி., ஒருவரும் கால மாகிவிட்டார். ஒரு சிலர் கரோனாவிற்கு பலியாகியுள்ளனர். ஹிமாச்சலப் பிரதே சத்தைச் சேர்ந்த ஒரு பா..., - எம்.பி., டில்லியில் தூக்கிட்டு இறந்தார்.

இதனால், பில்லி, சூனியத்தில் மாட்டி விட்டோமா என, அஞ்சுகின்றனர் பா.., தலைவர்கள். கேரளாவிலிருந்து ஒரு பூஜாரியை டில்லிக்கு அழைத்துள்ளனர்.

கட்சி அலுவலகம் மற்றும் புதிய பார்லிமென்ட் கட்டப்படும் இடங்களில், பூஜை மற்றும் யாகங்கள் நடக்க உள்ள னவாம்.

தினமலர்', 22.3.2021, பக்கம் 9

மனிதர்கள் பிறப்பதும், சாவதும் இயற்கைதான். இதற்கெல்லாம் காரணம் பில்லி, சூனியமா? பில்லி, சூனியத்திற்குச் சக்தியிருந்தால் அரசு ஏன்? இலாக்காக் கள் ஏன்? மருத்துவமனைகள் ஏன்?

இந்திய அரசமைப்புச் சட்டம் 51(எச்) என்ன சொல்லுகிறது?

மக்களிடத்தில் விஞ்ஞான மனப் பான்மையை வளர்க்கவேண்டும் என்று கூறுகிறதே - இதனைக் காலில் போட்டு மிதிப்பது - அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதம் அல்லவா?

பில்லி, சூனியம் என்பது அறிவிய லுக்கும், பகுத்தறிவுக்கும் உட்பட்டதா? அல்லது நிரூபணத்திற்கும் உள்பட்டதா?

பில்லி, சூனியம்மூலம் எதிராளி களைச் சாகடிக்க முடியும், வீழ்த்த முடியும் என்றால், இராணுவத் துறையே தேவையில்லையே! உலகில் 4 ஆவது பலமிக்கது என்று மார்தட்ட வேண்டிய அவசியம் இல்லையே! மக்கள் வரிப் பணத்தைக் கோடிக் கணக்கில் கொட்டி அழவேண்டிய தேவையும் இல்லையே!

குடும்பங்களில் இழப்பு, துயரம் என்பது எல்லாம் சர்வ சாதாரணமாகும்.

சில உறவினர்களுடன் நேசமாகவும், சில உறவினர்களுடன் பகையாகவும் இருப்பதும் பொதுவான அம்சமாகும். வாழ்வு நிலையில் பல்வேறு சிக்கல்களில் குடும்பம் சிக்குண்டு இருப்பதும் பொது வான அம்சமாகும். தமது சிக்கல்களில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் பலகீன மனம் உடையோரிடம் அவர்களின் பகைவர் செய்ததன் விளைவுகளா கவோதான் மேற்சொன்ன கஷ்டங்கள் விளைந்து இருக்கலாம் என்று யாராவது சொன்னால் அதையும்தான் பார்ப்போமே என்று தோன்றும். உடனே அதற்கான மந்திரவாதியை அணுகுவர். மந்திர வாதியோ அதற்கானபூசை சாமான்களை வைத்துப் பல மணி நேரம் பூசை செய்து, பின் ஓர் இடத்தில் தோண்டச் சொல்வார். சாதாரணமாக இரண்டு மூன்று குழிகள் தோண்டிய பிறகு நீள் உருளை வடிவத்தில் தகடு எடுத்துக் காட்டுவார். அதனுள் சாதாரணமாக மயிர், இரத் தத்துளி, எலும்புத் துண்டு போன்றவை இருக்கும். வீட்டுக்காரருக்கு செய்வினை எடுபட்டுவிட்டதாக திருப்தி, மந்திர வாதிக்கு நல்ல ஆதாயம்.

எங்கிருந்து வந்தது அந்தத் தகடு? பொதுவாக இதுபோன்ற விஷயங்களில் மலையாள மாந்திரீகத்துக்கு தனி மவுசு உண்டு, கோவூர், மலையாள நாட்டி லேயே இந்த ரகசியத்தைக் கண்டு பிடித்து அம்பலப்படுத்தினார்.

மாஜிக்காட்சிகளில் பார்ப்பவர் கண்களை ஏமாற்றி கைகளில் பொருள் களை வரவழைப்பதும், மறையச் செய் வதும், சரளமாக நடப்பதும் உண்டு. செய்வினை இருக்குமோ என்ற அச்ச உணர்வில் பலமணி நேரம் பூசை என்ற பெயரில் மனத்தளர்ச்சியுறச் செய்த நிலையில் அந்த மந்திரவாதி தானே குழியில் போட்டு எடுத்துக் காண்பிப்பதும் உண்டு. அல்லது தனது ஏவலாள் மூலம் ஏற்கெனவே புதைக்கச் செய்து பின் எடுத்துக் காட்டுவதும் உண்டு. தகட்டின் ரகசியம் இவ்வளவே.

அதேபோல் பில்லி, சூனியத்திற்கு இலக்கான வீட்டில், கல் விழுவதும், சமைத்த சாப்பாட்டில் அசுத்தங்கள் கிடப்பதுமான வித்தியாசமான செயல்கள் இருக்கும். உண்மையில் அந்த குறிப் பிட்ட வீட்டில் ஒரு குறிப்பிட்ட நபர், ஒரு குறிப்பிட்ட மன நோய்க்கு உள்ளாகி சுயநினைவின்றி மேற்சொன்ன காரியங் களைச் செய்கிறார். இதனைப் பின் வருமாறு நிரூபிக்கலாம். அந்தக் குறிப்பிட்ட வீட்டில் வாழும் நபர்கள் ஒவ்வொருவருக்கும், ஒரே நேரத்தில் ஒவ்வொரு நபரை, கூட இருந்து கவனிக்கச் செய்தால் மேற்சொன்ன காரியங்கள் நடக்காது. கவனிப்பை நிறுத்தினால் நடக்கத் தொடங்கும். மன நோய் மருத்துவத் துறையை அவர்கள் அணுகுவதே சரியாகும். இது தொடர்பான ஆய்வுச் செய்திகளை கோவூரின் நூலில் படிக்கலாம்.

பாஸ்பரஸ் எனும் பொருளை ஈரச் சாணிக்குள் வைத்து வீட்டுக் கூரையில் செருகினால் சூரிய ஒளியில் சாணி காய்ந்தவுடன் பாஸ்பரஸ் எரியும். இப்படி தனக்கு பிடிக்காதவர் வீட்டின் கூரையில் ஈரச் சாணிக்குள் பாஸ்பரஸ்ஸை வைத்துச் செருகிவிட்டு செய் வினை என்பார்கள்.

எனவே இதுபோன்ற காரியங்களை முறையாக ஆய்வு செய்தால், அது மனநோய் காரணம் என்பது வெளிப் படும். அல்லது மோசடி காரணம் என்பது வெளிப்படும்.

மத்தியில் ஆளக்கூடிய பா... என்னும் கட்சி அறிவியல் உலகில் உயிர் வாழத் தகுதியற்றதே!

 - மயிலாடன்

Comments