தேர்தல் களத்தில்..... : தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் 2021

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை.தி.மு.. தேர்தல் அறிக்கை வெளியீடு

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும், தமிழர்கள் 7 பேர் விடுதலைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று .தி.மு.. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

.தி.மு.. தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள .தி.மு.. அலுவலகத்தில் நேற்று (17.3.2021) நடைபெற்றது.

.தி.மு.. பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அமைப்பு செயலாளர் வந்தியத்தேவன், தேர்தல் பணி செயலாளர் ஆவடி அந்தரிதாஸ், செய்தி தொடர்பாளர் நன்மாறன் உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை பெற்றுக்கொண்டனர்.

.தி.மு.. தேர்தல் அறிக்கையில் 55 வாக்குறுதிகளை அளித்துள்ளது.

1. மாநில உரிமையை பாதுகாக்க குரல் கொடுப்போம், 2. மதசார்பின்மையை பேணுவோம், 3. சமூக நீதியை பாதுகாப்போம், 4. இந்தி, சமஸ்கிருதம் மொழி திணிப்பை எதிர்ப்போம், 5. வேளாண்மையை பாதுகாப்போம், 6. விளைநிலங்களை பாதிக்கும் திட்டங்கள் தடுத்து நிறுத்தப்படும், 7. நில அளவை சீரமைக்கப்படும், 8. பாசனம், நீர் மேலாண்மை உறுதிப்படுத்தப்படும், 9. நதிநீர் இணைப்பு திட்டங்கள் நிறைவேற்றப்படும், 10. ஆற்றுநீர் பங்கீட்டு சிக்கல்கள் நீக்கப்படும், 11. தொழில்துறை பாதுகாக்கப்படும், 12. பொதுத்துறை காக்கப்படும், 13. மின்சார விநியோகம் சீரமைக்கப்படும். 14. தொழிலாளர் நலன் பாதுகாக்கப்படும், 15. ஆசிரியர், அரசு ஊழியர்கள் நலன் காக்கப்படும். 16. போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும், 17. தொழிலாளர் ஈட்டுறுதிக்கழகம் அமைக்கப்படும், 18. ஊழல் ஒழிக்கப்படும், 19. ஊராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் வழங்கப்படும், 20. முழு மதுவிலக்கு கொண்டு வரப்படும், 21. மக்கள் நல்வாழ்வுக்கு உறுதி அளிக்கப்படும். 22. மகளிர், குழந்தைகள் நலன் காக்கப்படும், 23. பிற்படுத்தப்பட்டோர் நலன் காக்கப்படும், 24. பட்டியலின பழங்குடியினர் நலன் உறுதிப்படுத்தப்படும், 25. சிறுபான்மையினர் நலன் பேணப்படும், 26. இளைஞர் மாணவர் நலன் பாதுகாக்கப்படும், 27. மீனவர் நலன் காக்கப்படும், 28. மாற்றுத்திறனாளிகள் நலன், 29. வணிகர் நலன், 30. ஊடகத்துறை நலன், 31. மனித உரிமைகள் காக்கப்படும், 32. கொடுங்கோன்மை சட்டங்களை எதிர்ப்போம், 33. ஈழத்தமிழர் இனப்படு கொலைக்கு நீதி பெறுவோம், 34. தமிழ் ஈழம் மலர பொது வாக்கெடுப்பு நடத்த வற்புறுத்துவோம், 35. தமிழை ஆட்சி மொழியாக்க வற்புறுத்துவோம், 36. கல்வி, 37. தமிழக ரெயில்திட்டங்கள், 38. விமான நிலையங்கள் மேம்பாடு ஆகியவை வற்புறுத்தப்படும். 39. மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

40. ஸ்டெர்லைட் ஆலை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கப்படும். 41. நியூட்ரினோ திட்டத்தை தொடர்ந்து எதிர்ப்போம், 42. சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும், 43. சீமைக் கருவேல மரங்கள் அழிக்கப்படும், 44. கால நிலை சட்டம் இயற்ற வலியுறுத்துவோம், 45. மணல் கொள்ளையை தடுப்போம், 46. கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு தொடரும், 47. காட்டுப்பள்ளி துறைமுகம், 48. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் காக்கப்படும், 49. தொல்லியல் ஆய்வு நடைபெறும், 50. தேர்தல் சீர்திருத்தம் கொண்டு வரப்படும், 51. சுற்றுலா வளர்ச்சி மேம்படுத்தப்படும், 52. சட்டம் நீதித்துறை சீரமைக்கப்படும், 53. வெளிநாட்டு தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்படும், 54. ஏழு தமிழர்கள் விடுதலைக்காக பாடுபடுவோம், 55. அடக்குமுறை எதிர்க்க அணி திரள்வோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பில்லாமல் தேர்தல் நடத்துவது எப்படி

தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை

தமிழகத்தில் கரோனா பரவல் பாதிப்பில்லாமல் தேர்தலை நடத்துவதற்காக ஏற்கனவே தேர்தலை நடத்தியுள்ள பீகார் மாநில சுகாதார அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று (17.3.2021) ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்தில் கரோனா காலகட்டத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. கரோனா பரவல் உள்ள சூழ்நிலையிலும்கூட பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தலை தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக நடத்தி இருந்தது.எனவே அங்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரவல் தடுப்பு மேலாண்மை குறித்த தகவல்களை அறிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விரும்பினார். எனவே அங்குள்ள சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடப்பட்டது.

அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு பீகார் மாநிலத்தின் சுகாதாரத் துறை அதிகாரிகள் சுதீர்குமார், டாக்டர் ரோஹினி துர்பா ஆகியோர் தமிழகத்திற்கு வந்தனர். இங்கு தேர்தல் நடவடிக்கைகளின்போது மேற்கொள்ளப்படவுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்தநிலையில் அவர்கள் இருவருடனும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு, தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டம் குறித்து சத்யபிரத சாகு கூறியதாவது:-

கரோனா காலகட்டத்தில் முதலில் தேர்தல் நடந்த மாநிலம் பீகார். அங்கிருந்து 2 அதிகாரிகள் இங்கு வந்துள்ளனர். அங்கு கரோனா தொற்று இருக்கும்போதே அவர்கள் தேர்தலை நடத்தி முடித்துள்ளனர்.

எனவே இங்கும் அதுபோன்ற கொரோனா பரவல் இருக்கும் சூழ்நிலையில், அவர்களின் அனுபவத்தை கேட்பதற்காக  அழைத்துப் பேசினோம்.

அங்குள்ள சுகாதாரத் துறை செயலாளரிடம் தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளர் பேசினார். கரோனா மேலாண்மை பற்றி பல்வேறு அனுபவங்களை அவர்கள் பரிமாறினார்கள். சுகாதாரத் துறையுடன் தேர்தல் ஆணையம் மிகவும் ஒருங் கிணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

பீகாரில் தேர்தல் நடந்தபோது அங்கு நாளொன்றுக்கு தொற்று விகிதம் 12 ஆயிரமாக இருந்தது. ஆனால் நமக்கு 800க்கும் சற்று அதிகமாகவே உள்ளது. இதை கருத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.. தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தி.மு.. சார்பில் தேர்தல் பணிகளை கவனித்திட முதல்கட்டமாக மண்டல பொறுப்பாளர்களும், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் தெற்கு மண்டலத்துக்கு தேர்தல் பொறுப்பாளராக தி.மு.. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய மண்டல தேர்தல் பொறுப்பாளராக மு.சண்முகம் எம்.பி., வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராக எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி, மேற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராக தயாநிதிமாறன் எம்.பி., சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் தேர்தல் பொறுப்பாளராக .ராசா எம்.பி., நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு தொகுதி வாரியாகவும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொளத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளராக கி.நடராஜன், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி தேர்தல் பொறுப்பாளராக .சரவணன், துறைமுகம் தொகுதி பொறுப்பாளராக தமிழன் பிரசன்னா, பல்லாவரம் தொகுதி பொறுப்பாளராக மீ..வைத்தியலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மயிலாப்பூர் தொகுதி பொறுப்பாளராக குமரி விஜயகுமார், ராயபுரம், பெரம்பூர் தொகுதி பொறுப்பாளராக காசிமுத்து மாணிக்கம், ஆர்.கே.நகர். தொகுதி பொறுப்பாளராக சுபா.சந்திரசேகரன், மதுர வாயல், அம்பத்தூர் தொகுதி பொறுப்பாளராக பி.டி.சி. ஜி.செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அண்ணாநகர் தொகுதி பொறுப்பாளராக சி.எச். சேகர், திருவள்ளூர் தொகுதி பொறுப்பாளராக துறைமுகம் காஜா, மதுராந்தகம் தொகுதி பொறுப்பாளராக டாக்டர் ஆர்.டி.அரசு நியமிக்கப்

பட்டுள்ளனர்.

காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் தேர்தல் ஆணையம் உத்தரவு

தென் மண்டல காவல் சரக தலைவர் (அய்.ஜி) முருகன் உள்ளிட்ட 9 காவல்துறை அதிகாரிகளுக்கு தேர்தல் பணிகளை ஒதுக்க வேண்டாம் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆணையம் நியமித்த சிறப்பு காவல் பார்வையாளர் அளித்துள்ள தகவல் அடிப்படையில், தென் மண்டல காவல் அய்.ஜி எஸ். முருகன் தேர்தல் பணி அல்லாத பதவிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், சென்னை மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றி வரும் ஆர். அன்பரசன், எம். வேல்முருகன், எச்.கிருஷ்ணமூர்த்தி, மதுவிலக்கு பிரிவில் பணியாற்றி வரும் பி. கோவிந்தராஜா, பொருளாதார குற்றப்பிரிவு தலைமையகத்தில் பணியாற்றி வரும் எம்.எஸ்.எம். வளவன், வேலூரில் பணியாற்றி வரும் .திருநாவுக்கரசு, விழுப்புரத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப்பிரிவில் பணியாற்றி வரும் எம்.ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் பணியாற்றி வரும் பி.டி. சுபாஷ்,. திருச்சியில் மதுவிலக்குப் பிரிவில் பணியாற்றி வரும் பி.கோபாலன்சந்திரன் ஆகியோ ருக்கும் தேர்தல் பணி எதுவும் ஒதுக்காமல் அனைவரையும் காவல் தலைமை இயக்குநர் அலுவலகத்துடன் இணைக்கப் பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments