கரோனா: ஒரே நாளில் 14 பேர் உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 30, 2021

கரோனா: ஒரே நாளில் 14 பேர் உயிரிழப்பு

சென்னை, மார்ச் 30 தமிழகத் தில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்குகிறது.

தமிழகத்தில் நேற்றைய (29.3.2021) கரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்ப தாவது:-

தமிழகத்தில் நேற்று புதி தாக 80 ஆயிரத்து 253 பேருக்கு கரோனா பரிசோதனை செய் யப்பட்டது. அதில் 1359 ஆண்கள், 920 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 279 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் வெளிமாநிலங் களில் இருந்து வந்த 7 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 85 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 344 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களி லும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று அதிக பட்சமாக சென்னையில் 815 பேரும், கோவையில் 211 பேரும், செங்கல்பட்டில் 202 பேரும், குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 4 பேரும், அரியலூர், பெரம்பலூரில் தலா இருவரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 91 லட்சத்து 5 ஆயி ரத்து 807 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டு உள்ளது. இதில் 8 லட்சத்து 81 ஆயிரத்து 752 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ கத்தில் இதுவரை 5 லட்சத்து 32 ஆயிரத்து 469 ஆண்களும், 3 லட்சத்து 49 ஆயிரத்து 247 பெண்களும், 3ஆம் பாலினத் தவர் 36 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 32 ஆயிரத்து 286 குழந்தை களும், 60 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 21 ஆயிரத்து 140 முதியவர்களும் இடம் பெற் றுள்ளனர். கரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 7 பேரும், தனியார் மருத்துவ மனையில் 7 பேரும் என 14 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் செங்கல்பட்டில் 4 பேரும், கோவை, சென்னை யில் தலா இருவரும், கடலூர், கரூர், மதுரை, நாகப்பட்டினம், திருவள்ளூர், திருப்பூரில் தலா ஒருவரும் என 9 மாவட் டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. தமிழகத்தில் இது வரை 12 ஆயிரத்து 684 பேர் கரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1,352 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னை யில் 464 பேரும், செங்கல்பட் டில் 133 பேரும், தஞ்சாவூரில் 104 பேரும் அடங்குவர். இது வரையில் 8 லட்சத்து 55 ஆயிரத்து 85 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச் சையில் 13 ஆயிரத்து 983 பேர் உள்ளனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை  செய்திக் குறிப்பில்  கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment