தொழிலாளர் நலனை புறந்தள்ளிய மத்திய பா.ஜ.க. அரசு

 கருநாடக தொழிற்சங்க தலைவர் சாடல்

பெங்களூரு, மார்ச் 30- அமைப்பு  சாரா தொழிலாளர்  வாரியத்திற்கு  தரவேண்டிய ரூ.911 கோடியை  உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் மற்றும் முதன்மை செயலாளர் ஆகியோருக்கு கருநாடக மாநில அய்என் டியூசி தலைவர் எஸ்.எஸ். பிர காசம் கடிதம் எழுதியுள்ளார்இது தொடர்பாக எஸ்.எஸ். பிரகாசம் கூறியதாவது:

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு தொழிலா ளர்கள் நலனை புறந்தள்ளி வருகிறது. லாபத்தில் இயங் கும் பொதுத்துறை நிறுவனங் கள் ஒவ்வொன்றாக தனியா ருக்கு தாரை வார்க்கப்படும் பணிகள்  நடந்து வருகின்றன. கரோனா வைரஸ் பாதிப்பின் போது அமைப்பு சாரா தொழி லாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி தொழிலாளர் நலவாரி யம்  சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிதியு தவி வழங்கப்பட்டது. அத்து டன் உணவு தானியம் உள் ளிட்ட அத்தியாவசியப் பொருட் களை நாங்கள் வினியோகம் செய்தோம்.

அதே நேரம் மத்திய தொழிலாளர் நலத்துறை ரூ.911 கோடி நிதியை தொழிலாளர் நலவாரியத்திற்கு உடனடி யாக வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இதை வலியுறுத்தி மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மற்றும் முதன்மை செயலாளருக்கு கடிதம் எழு தியுள்ளோம். பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கிறது.

அதே நேரம் பிரதமர் நரேந்திரமோடி இதைப்பற்றி கண்டுகொள்ளாமல் தான் தோன்றித் தனமாக நடந்து கொள்கிறார். நாட்டின் பிர தமராக நேரு பதவி வகித்த போது அய்ந்தாண்டு திட்டங் கள் வகுக்கப்பட்டு உள்நாட் டில் தொழிற்துறை பெருகும் வகையில் நடவடிக்கை எடுக் கப்பட்டது. இப்போது பிர தமர் நரேந்திரமோடி தலை மையிலான பாஜகவினர் பொதுத்துறை நிறுவனங் களை தனியாருக்கு தாரை வார்க்கின்றனர்’’ என்றார் அவர்.

Comments