கரோனா நோயாளிகளுக்கு அஞ்சல் வாக்கு அளிக்க கோரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 30, 2021

கரோனா நோயாளிகளுக்கு அஞ்சல் வாக்கு அளிக்க கோரிக்கை

 சென்னை, மார்ச் 30- தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே.இளமாறன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தாவது,

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கரோனா பரவல் காரணமாக, வாக்களிக்கும் நேரம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு நாளன்று கடைசி ஒரு மணி நேரம் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கரோனா பாதிப்பால் கடைசி நேரத்தில், வாக்களிக்க வரும் வாக்காளர்கள் அச்சத்தின் காரணமாக வாக்குச்சாவடிக்கு வருவதை தவிர்ப்பார்கள். இதனால் வாக்குப்பதிவு குறைய வாய்ப்புள்ளது. எனவே, 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், அச்சமின்றி வாக்களிக்க கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சல் வாக்குகள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வணிகவியல் மேலாண்மையில்

ஆராய்ச்சி மாணவருக்கு பட்டம் வழங்கல்

சென்னை, மார்ச் 30- சென்னை நுங்கம்பாக்கத்தில் வணிக நிர்வாகவியல் படிப்புகளை கற்றுத்தரும்  லயோலா இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (லிபா) 42ஆவது பட்டமளிப்பு விழா சென்னையில் அந்த கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது.

 டிரான்ஸ்மிஷன் நிர்வாக இயக்குநர் கே.மோசஸ் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். லிபா தலைவரும் நிர்வாக குழு உறுப்பினருமான டாக்டர் ஜெபமலை இருதயராஜ், லிபா இயக்குநர் ஜோ.அருண் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் அவர்களது பெற்றோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

மொத்தம் 135 முழுநேர மாணவர்களுக்கு வணிகவியல் மேலாண்மையில் முதுகலை பட்டயங்களையம், ஒரு ஆராய்ச்சி மாணவருக்கு பிஎச்டி பட்டமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய லிபா இயக்குநர் ஜோ. அருண்  அறிவின் பயணம் ஒருபோதும் முடிவில்லாதது. ஈகோ இல்லாமல் அறிவைத் தூண்டிக்கொண்டே இருங்கள் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். உங்க ளது எதிர்காலத்தை வடிவமைத்த நிறுவனத்திற்கு எப்போதும் நன்றியை வெளிப்படுத்துங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

வாழ்க்கையில் நேர்மையாக இருப்பது மிக முக்கியமானது என்று தலைமை விருந்தினராக பேசிய அலிசன் டிரான்ஸ்மிஷன்களின் நிர்வாக இயக்குநர் கே.மோசஸ்  கூறினார்.  லிபா முதல்வர் டாக்டர் தீபா எல்.டி.மணி உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment