பிறக்கும் குழந்தையின் தலையில் கூட கடன் சுமை: பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் புறக்கணிப்பு

திமுக தலைவர் மு..ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை,பிப்.24- தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் (நேற்று (23.2.2021) வெளியிட்ட அறிக்கை வருமாறு,

நாட்டு மக்களின் நலனை அறவே புறக்கணித்து, தொடர்ந்து முறைகேடுகள் செய்து, தம்மையும் தம்மைத் தாங்கிப் பிடிக்கும் பினாமிகளையும் மேலும் மேலும் வளப்படுத்திக் கொள்வதற்காகவே, கடன் வாங்கி, தமிழக மக்கள் தலையில் 5.70 லட்சம் கோடி ரூபாய் கடனைச் சுமத்தியுள்ள முதல்வர் பழனிசாமி மற்றும் நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான .பன்னீர்செல்வம் ஆகியோருக்கு, திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆறாவது ஊதிய ஆணையத்தை அமல்படுத்தி - பொருளாதார தேக்க நிலைமை இருந்த நிதியாண்டில் கூட, உபரி நிதிநிலை அறிக்கையை விட்டுச் சென்றது திமுக ஆட்சி.

நிதிப்பேரிடரை ஏற்படுத்தியுள்ளார்கள்

ஆனால் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில்-தொடர் வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை என்று எல்லா நிலைகளிலும், மிக மோசமானதொரு நிதி நிர்வாகத்தைக் கையாண்டு-வருமானத்திற்கு மீறிய சொத்துக்குவிப்புப் புகாருக்கு உள்ளாகியுள்ள நிதியமைச்சர் .பன்னீர்செல்வமும், முதல்வர் பழனி சாமியும் தமிழக மக்களுக்கு, என்றும் எளிதில் நீங்காத மாபெரும் நிதிப்பேரிடரையும், நிதி நெருக்கடியையும் உருவாக்கி விட்டார்கள்.

கடன்சுமையில் தள்ளாடும் தமிழகம்

2006-2011 வரையிலான திமுக ஆட்சியில் வாங்கிய கடன் வெறும் 44 ஆயிரத்து 84 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால் தற்போது அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்டுள்ள கடன் மட்டும் 3.55 லட்சம் கோடி. இது இறுதிக் கணக்கு வரும் போது இன்னும் அதிகரிக்கும். கரோனா பேரிடருக்கு முன்பே-அதாவது 2018 ஆம் ஆண்டிலேயே 68 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் காணாமல் போய்-நிதி நிலைமை மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி விட்டது. 2003ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதி நிலை நிர்வாகப் பொறுப்புடைமைச் சட்டம் வந்த பிறகு தமிழக வரலாற்றில் கடனை வாங்கி கடனுக்கு வட்டி கட்டும் ஒரே அரசு அதிமுக அரசு. இதுவா வெற்றி நடை போடும் தமிழகம். கடன் சுமையில் தள்ளாடும் தமிழகம் அல்லவா?

தேர்தலுக்கு முன் பணிகளை மேற்கொண்டு நிறைவேற்ற முடியாது என்று நன்கு அறிந்திருந்தும் கூட, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள ஒப்பந்தப் புள்ளிகளை விடுத்து-அரசு கஜானாவை காலி செய்துள்ளார் முதல்வர். அதிமுக ஆட்சியில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் 78,854.25 கோடி ரூபாய் இழப்பில் இயங்கி வருகின்றன.  அதிமுக ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வரும் வருவாய் பற்றாக்குறையால் கடன் அதிகரித்து வருகிறது.

இன்றைக்கு தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் தலையிலும்- ஏன் பிறக்கும் குழந்தையின் தலை யில் கூட, 62 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடனை அதிமுக அரசு சுமத்தி விட்டுச் செல்கிறது. பெட் ரோல் - டீசல் மூலம் தமிழக அரசுக்குக் கிடைத்த ரூ.87 ஆயிரம் கோடி எங்கே போனது என்றே தெரியவில்லை. கரோனா காலத்தில் வாங்கும் கடன் களிலும் Ôகமிஷன்Õ அடிப்பதை பழனிசாமியும், அவர் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களும்-நிதியமைச்சர் .பன்னீர்செல்வமும் அமைச்சரவைப் பணி போல் செய்து-“கடைசி நேர டெண்டர்கள்கடைசி நேர கமிஷன்களுக்குதலையாய முக்கி யத்துவம் கொடுத்து, முறைகேடுகளில் மூழ்கி இருக்கிறார்கள்.

அனைத்துத் துறைகளிலும் படுதோல்வியடைந்த ஒரு அவல ஆட்சியைக் கொடுத்து விட்டுச் செல் வோரின் கடைசி நிதி நிலை அறிக்கை (இடைக்கால நிதி நிலை அறிக்கை) உரையையும் - கூட்டத் தொட ரையும் திமுக புறக்கணிக்கிறது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image