சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு நிதி வழங்க முதலீடு திரட்டல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 24, 2021

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு நிதி வழங்க முதலீடு திரட்டல்

சென்னை, பிப். 24- கினரா கேப்பிடல் நிறுவனம் தொழில் முனைவோர்கள் மற்றும் சிறு, குறு  மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு அடமானம் இல்லாமல் கடன் வழங்க இண்டஸ்இண்ட் வங்கியிடமிருந்து ரு. 74 கோடியை திரட்டியுள்ளது. சமூக பொறுப்புள்ள நிதி நிறுவனமான கினரா (KINARA) கேப்பிடல் நிறுவனம், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்கு என 100 கோடி ரூபாயை பங்கு மூலதனமாகவும், கடனாகவும் திரட்ட இந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக மேற்குறித்த நிதியை தற்போது திரட்டியுள்ளது என இந்நிறுவன தலைமை செயல் அதிகாரி ஹார்திகா ஷா தெரிவித்துள்ளார்.

ஆயத்த ஆடை தொழில் துறைக்கான

விருது வழங்கல்

சென்னை, பிப். 24- வேலை வாய்ப்புகளை இளைஞர்களுக்கு அதிகளவில் வழங்கி வரும் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத்துறையில், அதன் சாதனைகள் மற்றும் உலகளாவிய ஜவுளித் துறையில் நிலைத்தன்மையின் தொடர்ச்சியான மேம்பாடுகளுக்காக 2020ஆம் ஆண்டுக்கான பன்னாட்டு தங்கமயில் விருதை பிர்லா செல்லுலோஸ் (Birla celluiose) நிறுவனம் வென்றுள்ளது. சிறந்த தரமான சுற்றுச்சூழல் செயல்திறனை தொடர்ச்சியாக வழங்கக்கூடிய நிலையான வணிகங்களை உருவாக்குவதில் எங்கள் பார்வையின் ஒரு சான்றாகும் என இவ்விருது பெற்ற இந்நிறுவன நிர்வாக இயக்குநர் திலீப் கவுர் தெரிவித்துள்ளார்.

தொற்றுநோயை தடுக்கும்

ஊட்டச்சத்து உணவுகள் அறிமுகம்

சென்னை, பிப். 24- தொற்றுநோய் காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இயற்கையான மற்றும் ஆரோக்கிய உணவுக்கான தேவைகள் மற்றும் விழிப்புணர்வு நுகர்வோரிடையே அதிகரித்து வருவதையும், இந்திய காலை உணவு சந்தையில் அத்தகைய உணவுகள் குறைவாக கிடைக்க பெறும் இடைவெளியையும் கண்டறிந்த இயற்கை உணவு தயாரிப்பு நிறுவனமான 24 மந்திரா ஆர்கானிக், அசாம் தேநீர், கிரீன்டீ, துளசி, இஞ்சி, மஞ்சள் போன்ற 12 வகையான இயற்கை பொருள்களை கொண்ட உணவு வகைகளை அறிமுகம் செய்துள்ளது என இந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி என்.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment