நாகையில் மா.அருள்ஜோதி படத்திறப்பில் கழகத் துணைத் தலைவர் நினைவேந்தல் உரை

நாகை, பிப். 24-- நாகப்பட்டினம் கேசிபி நகரில் நினைவில் வாழும் மா.அருள் ஜோதி அவர்களின் படத்திறப்பு 21.2.2021 அன்று காலை 11 மணியள வில் நடைபெற்றது.

படத்தினை பேராசிரியர் சரஸ்வதி திறந்து வைத்தார். முன்னதாக அருள் ஜோதி அவர்களுடைய இளைய மரு மகன் வீரமணி அனைவரையும் வர வேற்று உரையாற்றினார். பின்னர் பேசிய திராவிடர் விடுதலை கழகத் தின் பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன், மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சியின் தலைமை நெறி யாளர் குணசேகரன் ஆகியோர் அவ ருடைய வாழ்க்கை பண்புகளையும் அவர்களுடைய எழுத்தாற்றலையும் எடுத்துரைத்து உரையாற்றினார்கள்.

 இறுதியாக திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் உரையாற்றினார் அவர் தனது உரையில்,

மூடப்பழக்க வழக்கம் இல்லாத இந்தப் படத்திறப்பின்  சிறப்புகளையும் இது போன்ற நிகழ்வுகளையும் தந்தை பெரியார் அவர்கள் தான் அறிமுகப் படுத்தினார் என்றும், மறைந்த அருள் ஜோதி அவர்கள் சிறந்த பன்முகத் தன்மை கொண்டவர் நுணுக்கமான சிந்தனை கொண்டவர் என்றும், அவர் நினைவில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடியவர் என்றும் பல்வேறு வரலாற்று ஆய்வுகளை எடுத்து வைத்து உரையாற்றினார்.

முன்னதாக நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.. நெப்போலியன் நாகை மாவட்ட செயலாளர் ஜெ. புபேஸ்குப்தா திருவாரூர் மாவட்ட தலைவர் வீ.மோகன், திருவாரூர் மாவட்ட துணைத் தலைவர் எஸ். எஸ்.எம்.அருண்காந்தி, நாகை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மூ..ஜீவா, நாகை மாவட்ட துணை செயலாளர் பாவா.ஜெயக் குமார், நாகை மாவட்ட ஆசிரியர் அணி தலைவர் இரா.முத்துகிருஷ் ணன், திருமருகல் ஒன்றியத் தலைவர் பொன்.செல்வராசு மற்றும் உறவினர் கள் ஆகியோர் இரங்கல் உரை நிகழ்த் தினார்கள்.

நிகழ்ச்சியை மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் ஒருங்கி ணைத்தார்.

நிறைவாக மறைந்த அருள்ஜோதி அவர்களின் மூத்த மருமகன் சீனி வாசன் நன்றி கூறினார்.

Comments