முல்லைபெரியாற்றில் பறிபோகும் தமிழக உரிமை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 24, 2021

முல்லைபெரியாற்றில் பறிபோகும் தமிழக உரிமை

மதுரை, பிப். 24 தமிழக பொதுப் பணித் துறையின் அலட்சியத் தால், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில், தமிழ் நாட்டிற்கான மற்றொரு உரிமை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கூறப் படுவதாவது; தமிழக பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட் டில் முல்லைப் பெரியாறு அணை உள்ளது. அங்கு ஆய் வாளர் மாளிகை, அலுவலர் மற்றும் ஊழியர்கள் குடியிருப் புகள் உள்ளன.

உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள், தொழில் நுட்ப உதவியாளர்கள், தற் காலிகப் பணியாளர்கள் என 20க்கும் மேற்பட்டோர் அணைப்பகுதியில் தங்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. ஆனால் 5க்கும் குறைவானவர்களே தங்கு கின்றனர்.

இதைப் பயன்படுத்தி அங்குள்ள 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் கேரள காவல்துறையினர் தங்குகிறார்கள். அவர்களுக்கு தனி குடியிருப்பு இருப்பினும் இவ்வாறு நடந்து கொள்ள தமிழக பொதுப்பணித்துறையினரின் அலட்சியம்தான் காரணமாகும்.

எனவே, மேலும் ஒரு உரிமையை தமிழ்நாடு இழப் பதற்கு முன்பாக, தமிழ்நாடு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.

No comments:

Post a Comment