கருநாடகாவில் மீண்டும் ஓர் ஆணவக் கொலை - தங்கை பிறந்த நாளில் கணவரை கொலை செய்த சகோதரர்கள்

பெங்களூரு, பிப். 18 பெங் களூருவில் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்ததால், மனைவி பிறந்தநாளில் புது மாப்பிள்ளை ஆணவக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மைத்துனர் உள்பட 2 பேர் கைது செய் யப்பட்டனர்.

பெங்களூரு ராஜகோபால் நகர் லக்கரேயை சேர்ந்தவர் சேத்தன் (வயது 25). இவரது மனைவி பூமிகா. இவர்கள் வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந் தவர்கள் இவர்கள் காதலித்து கடந்த 2 மாதங் களுக்கு முன்பு திருமணம் செய்து  கொண் டனர். திரு மணத் திற்கு பின்பு லக்கரேயில் வாடகை வீட்டில் சேத்தனும், பூமிகாவும் வசித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பூமி காவின் பெற்றோர், குடும்பத் தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

ஆனாலும் அவர்களது எதிர்ப்பையும் மீறி பூமிகாவை சேத்தன் திருமணம் செய்திருந் தார். இந்த நிலையில், நேற்று  (17.2.2021) பூமிகாவுக்கு பிறந்த நாள் ஆகும். இதனால் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்க, பூமிகாவின் சகோதரர் ஆகாஷ், சித்தப்பா நஞ்சேக வுடா  ஆகியோர் சேத்தன் வீட்டுக்கு வந்திருந்ததாக தெரிகிறது. அப்போது வீட் டின் அருகே வைத்து சேத்தன், ஆகாஷ் இடையே திடீ ரென்று தகராறு ஏற்பட்டது.

அந்த சந்தர்ப்பத்தில் ஆத்திரமடைந்த ஆகாஷ், அவரது சித்தப்பா நஞ்சேகவுடா ஆகிய 2 பேரும் சேர்ந்து சேத்தனின் கழுத்தை கத்தியால் அறுத்ததாக கூறப் படுகிறது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிர் இழந்தார். உடனே அங்கிருந்து 2 பேரும் தப்பி ஓடிவிட்டார்கள்.

காவல் துறை விசார ணையில் எதிர்ப்பையும் மீறி பூமிகாவை சேத்தன் திரு மணம் செய்திருந்ததால்,  சேத் தனை தீர்த்து கட்டியது தெரியவந்தது. இந்த ஆணவக் கொலையில் தலைமறைவாக இருந்த ஆகாஷ், நஞ்சேகவு டாவை கைது செய்துள்ளனர்.

Comments