கருத்துரிமை குறித்து பேசினால் நானும் கைது செய்யப்படலாம் : ராகுல் காந்தி

புதுச்சேரி,பிப். 18 “நாட்டு மக்கள் சிந்திப்பதற்காக கைது செய்யப்படுகிறார்கள். நாட் டில் பேச்சுரிமை நசுக்கப்பட்டு வருகிறது. இதை சொல்வதால், நானும் கைது செய்யப்பட லாம்'' என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.

சுதந்திரமாக கருத்து தெரிவித்த காரணத்திற்காக, சூழ லியல் செயற்பாட்டாளர் திஷா ரவி கைது செய்யப் பட்டுள்ளதை இவ்வாறு குறிப்பிட்டார் ராகுல் காந்தி.

புதுச்சேரியில், ஒரு கல்லூரி நிகழ்வில் அவர் கலந்து கொண்ட போது கூறியதா வது, “மக்கள் சிந்தித்துப் பேசு வதற்காக கைது செய்யப்படு கிறார்கள். இதை சொல்வதால் நானும்கூட கைது செய்யப்பட லாம். நீங்கள் இந்த நாட்டின் வாயை மூடி, அதன் மக்களை பேசாமலிருக்குமாறு மிரட் டும்போது, நாட்டின் அடை யாளப் பண்பையே நீங்கள் அழிக்கிறீர்கள்என்று காட் டமாக விமர்சித்துள்ளார்.

கல்லூரி மாணவிகளின் மத்தியில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:

 புதுச்சேரி மக்களின் கலாச் சாரம், பண்பாடு, உரிமையை காங்கிரஸ் கட்சி எந்நாளும் பாதுகாக்கும். காங் கிரசை பொறுத்தவரை மொழியை வைத்தோ, மதத்தை வைத்தோ அரசியல் செய்யவில்லை.

என்னைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளை நாடாளுமன் றத்தில் பேச அனுமதிப்ப தில்லை. நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி, புதுச்சேரி மக்களின் உணர்வுகளை கருத் தில் கொள்ளவில்லை. புதுச் சேரி யாருடைய தனிப்பட்ட சொத்தும் இல்லை. அப்படி நினைத்தால் விரைவில் ஏமாற்றம் அடைவார்கள்.

மோடிதான் என்ன நினைக்கிறாரோ அதையே இந்திய மக்கள் அனைவரும் நினைக்க வேண்டும் என நினைக்கிறார். இந்த நாட்டின் பிரதமராக அல்ல, இந்த நாட் டின் ராஜாவாகவே கருதிக் கொள்கிறார். தமிழகத்தில் தமிழ் பேசக் கூடாது என்கிறார்கள். மத்திய அரசை விமர்சித்தால் தேச விரோதி, தீவிரவாதி என்கிறார்கள். மோடி மனதில் என்ன உதிக்கிறதோ, அது தான் அனைவரது மனதிலும் உதிக்க வேண்டும். 6 ஆண்டு களாக மோடி செய்த அனைத் துமே பணக்காரர்களுக்கு மட் டுமே! என்று அவர் குறிப்பிட் டார்.

டில்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, ஒரு டூல்கிட்டை சமூக வலை தளத்தில் பகிர்ந்து கொண்ட தற்காக, 22 வயதேயான சூழலியல் செயற்பாட்டாளர் திஷா ரவி, டில்லி காவல் துறையின் சைபர் கிரைம் பிரி வால் கைதுசெய்யப்பட்டுள் ளார். தேசத் துரோகம், பகை மையை வளர்த்தல், குற்றச் சதி உள்ளிட்டப் பிரிவுகளில் அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.

Comments