மகளிர் சுய உதவி குழு கடன்கள் ரத்து செய்யப்படும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 21, 2021

மகளிர் சுய உதவி குழு கடன்கள் ரத்து செய்யப்படும்

தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் உறுதி

பொள்ளாச்சி, பிப். 21- ‘உங்கள் தொகுதி யில் ஸ்டாலின்என்ற பெயரில் தமி ழகம் முழுவதும் பிரசாரம் மேற் கொண்டு வரும் தி.மு. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் 19.2.2021 அன்று முதல் 3 நாட்கள் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் மு.. ஸ்டாலின் கூறியதாவது:-

.தி.மு.. ஆட்சியில் உண்மை யான விவசாயிகளுக்கு பல இன்னல் கள் ஏற்பட்டுள்ளது. கலைஞர் பணி யாற்றியது போன்று நான் பணி யாற்றுவேன். அதனால் உங்கள் பிரச் சினைகள் விரைவில் தீர்ந்து விடும். பழங்குடியின மக்களுக்கு பல நலத் திட்டங்களை உருவாக்கி கொடுத் தவர் கலைஞர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. .தி. மு. ஆட்சியில் தமிழகத்தில் பெண்க ளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

ஊனமுற்றோரை மாற்றுத் திறனா ளிகள் என அழைத்தவர் கலைஞர். அவரின் மகன் என்பதால் நான் பெருமை கொள்கிறேன். வருகிற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவேன் என கூறி வந்தேன். தற் போது நான் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திப்பது, அங்கு வரும் கூட்டத்தை எல்லாம் பார்க்கும்போது 234 தொகுதிகளிலும் வெற்றி பெறு வோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதே நான் சொன்னேன். தமிழ கத்தில் நடக்கும் பொல்லாத ஆட் சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்று. அது தற்போது நிரூபணமாகியுள்ளது. பொள்ளாச்சி பாலியல் சம்பவத் துக்கும், .தி.மு..வினருக்கும் தொடர்பு கிடையாது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். மேலும் அந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்ததாக கூறினார். ஆனால் மேலும் 3 .தி.மு.. நிர்வாகிகளை சி.பி.அய். கைது செய்துள்ளது. பொள்ளாச்சி சம்பவத்துக்கும், .தி.முக.வுக்கும் தொடர்பு இருப்பதை சி.பி.அய். நிரூ பித்துள்ளது.

ஆனால் பாதிக்கப்பட்டவர் களுக்கு இதுவரை நீதி கிடைக்க வில்லை. மாறாக இதில் தொடர்பு டையவர்களை காப்பாற்ற முயற்சித்து வருகிறார்கள்.

தற்போது கூட ஒரு காரை சி.பி.அய். கைப்பற்றியுள்ளது. அந்த கார் .தி.மு. கவுன்சிலர் ஒருவரின் கார். இதை சொல்வதில் எனக்கு எந்தவித பயமோ, அச்சமோ இல்லை. துணிவிருந்திருந்தால் நீங்கள் வழக்கு போட்டு பாருங்கள். அதனை சந்திக் கவும் நான் தயாராக உள்ளேன். இந்த வழக்கில் உள்ள நபர்கள் அனைவர் மீதும் சி.பி.அய். நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். அப்படி இல்லை என்றாலும் பரவாயில்லை. இன்னும் சில மாதத்தில் தி.மு. ஆட்சிக்கு வந்த தும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக் கப்படும். அவர் யார் என்றெல்லாம் பார்க்கமாட்டோம். இதில் தொடர் புடையவர்கள் யாராக இருந்தாலும் இந்த ஸ்டாலினிடம் இருந்து தப்பவே முடியாது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கேட்டு போய் உள்ளது. தி.மு. ஆட்சி அமைத்ததும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு என தனி கவனம் செலுத்தப்பட்டு அது சீரமைக்கப்படும். தி.மு. ஆட்சி அமைந்தவுடன் பெண்கள், குழந்தை கள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக் கப்படும்.

ஏற்கெனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டுறவு சங்கங்களில் ஏழை விவசாயிகள் வாங்கிய 5 பவுன் வரையிலான நகைகடனை ரத்து செய்வோம் என அறிவித்திருந்தோம். அந்தவகையில் தற்போது புதிய அறிவிப்பை வெளியிடுகிறேன். தி.மு. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் மக ளிர் சுய உதவிக் குழுவினர் வாங்கிய கடன் ரத்து செய்யப்படும் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment