திருநங்கைகள் பாதுகாப்பிற்கு தனிப் பிரிவைத் துவங்கும் காவல்துறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 21, 2021

திருநங்கைகள் பாதுகாப்பிற்கு தனிப் பிரிவைத் துவங்கும் காவல்துறை

அய்தராபாத், பிப். 21- திருநங்கைகளுக்கு பிரச்சினைகளை தீர்வு காண தனிப் பிரிவு அமைக்க அய்தராபாத் காவல் துறை முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்கள் கூட் டத்தில் பேசிய அய்தராபாத் காவல்துறை ஆணையர் வி.சி. சஜ்ஜனார், திருநங்கை களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண் பதற்கு 150 பேர் கொண்ட இந்த பிரிவு துவக்கப்பட உள்ளது. சமூக ஆர்வலர் சுனிதா கிருஷ்ணனின் வேண்டுகோளை ஏற்று, துவக்கப்பட்டுள்ள இந்த பிரிவு, திருநங்கைகள் தங்களுக்கு ஏற்படும் சமூக பிரச்சினைகளை பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. திருநங்கை களால் பொதுமக்களுக்கு ஏதேனும் பிரச் சினை இருந்தால் 100 அல்லது வாட்ஸ் அப் 9490617444 எண்ணுக்கு அழைக்க  வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற திருநங் கைகளின் சமூகத்தின் பிரதிநிதிகள், சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச் சினைகளை எடுத்துரைத்தனர், இதில் கல்வி பற்றாக்குறை, வேலைவாய்ப்பு கிடைக்காதது, வாடகைக்கு வீடுகளைக் கண்டுபிடிக்க இயலாமை, நெருக்கமான கூட்டாளர் வன்முறை, தெருவில் துன் புறுத்தல் மற்றும் சமூக சமூக வன்முறை ஆகியவை அடங்கும்.

மாநில அரசுகளை செயல்பட விடுங்கள்: பிரதமர் பங்கேற்ற  கூட்டத்தில்

ஒடிசா முதல்வர் காட்டம்

புதுடில்லி, பிப். 21- மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட மாநில அரசுகளை செயல்பட அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதிஆயோக் கூட் டத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்தார்.

பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல்வர்கள் பங்கேற்ற நிதிஆயோக் கூட்டம் காணொலி வாயிலாக சனிக்கிழமை (20.2.2021) நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், "ஒவ்வொரு நிகழ்வும் அரசியல் மயமாக்கப்பட்டு வருகிறது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஒரு அரசியல் கோணத்தில் பார்க்கப்படுகிறது. இந்த வகையான சூழ்நிலை நாட்டின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கு அச் சுறுத்தலாகும்" எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், "இருப்பினும், ஒரு முதிர்ச்சி யடைந்த ஜனநாயகத்தின் தனிச்சிறப்பு என்ன வென்றால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கட்சி எல்லைக்கு அப்பால் மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பதாகும். மக்கள் தேர்ந்தெடுத்த மாநில அரசுகள் செயல்பட அனுமதிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment