பெட்ரோல், டீசல் விலை உயர்வு ‘அது அப்படியே பழகிவிடுமாம்

திரைப்படப் பாணியில் பதில் அளித்த பா... அமைச்சர்

பாட்னா, பிப். 20  பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆரம்பத்தில் அதிர்ச்சிகரமாக இருக்கும் பிறகு அப்படியே பழகிவிடும் என்று பாஜக அமைச்சர் திரைப்படப் பாணியில் பதில் அளித்துள்ளார்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோக, சமையல் எரிவாயு உருளை விலையும் உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சாதாரண மக்கள் பேருந்தில் போவதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்படமாட்டார்கள் என பீகார் மாநில அமைச்சர் நாராயண் பிரசாத் தெரிவித்துள்ளார். இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அமைச்சர் பேசியபோது, “சாதாரண மக்கள் பேருந்தில் தான் பயணிக்கின்றனர். சிலர் மட்டுமே சொந்த வாகனத்தில் பயணிக் கின்றனர். எனவே சாதாரண மக்களுக்கு பாதிப்பில்லைஎன்று தெரிவித்துள்ளார். மேலும், விலையேற்றத்துக்கு பழகிக்கொள் ளும்படி அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து 11ஆவது நாளாக அதிகரித்துள்ளது. சில இடங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை தொட்டுவிட்டது.

இந்நிலையில், பணவீக்கத்துக்கும், விலை உயர்வுக்கும் மக்கள் பழகிவிட்டதாக அமைச்சர் நாராயண் பிரசாத் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் அதிர்ச்சியாக இருக்கும் பின்னர் அது மக்களுக்கு பழகிவிடும்'' என்று தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்படம் ஒன்றில் இதே போன்று ஒரு வசனம் இருக்கும். அதை தற்போது அமைச்சரே பேசியுள்ளார்.

Comments