மேற்குவங்க தலைநகரில் டிராக்டர் பேரணி: விவசாய தலைவர் ராகேஷ் திகாயத் அறிவிப்பு

கொல்கத்தா, பிப்.20  தலை நகர் எல்லையில் போராட் டம் நடத்தி வரும் விவசாயிகள், அடுத்ததாக விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட் டுள்ள மேற்கு வங்க மாநி லத்தின் கொல்கத்தாவில்  டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக தெரிவித்துள் ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் டில்லி போராட்டம் 80 நாள்களை கடந்துள்ளது. வேளாண் சட்டங்களைதிரும்பப் பெறா விட்டால், போராட்டம் நிறுத்தப்படாது என்று கூறி விவசாயிகள் போராட் டத்தை மேலும் தீவிரப் படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே, டில்லியில் டிராக்டர் பேரணி,  பேருந்து மறியல், ரயில்  மறியல் உள் பட பல்வேறு போராட்டங் களை நடத்திய நிலையில்,  தொடர்ந்து,  நாட்டின் பல் வேறு பகுதிகளில்விவசாயிகள் மகாபஞ்சாயத்-துகளை நடத்த திட்டமிட்டுள்ள னர்.

இந்த நிலையில் அரி யானா மாநிலம் கிசாரில் நடந்த மகாபஞ்சாயத்து நிகழ்ச்சியில் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் கலந்து கொண்டார். அங்கு பேசும்போது,   நாட் டின் சூழ்நிலையை நாங்கள் மாற்றி அமைக்க வந்துள் ளோம். அந்த அதிகார மய் யத்தை சரி செய்ய எங்களுக்கு ஒரு மாதம் போதுமானது. ஆளும் கட்சியினை சரியான பாதைக்கு மாற்றும் வரை நாங்கள் வீடு திரும்ப மாட் டோம். மேற்கு வங்கத்தில் உள்ள விவசாயிகளும் நெருக் கடியில் உள்ளனர். அவர் களுக்காகவும் நாம் போராட வேண்டியுள்ளது. நமது அடுத்த இலக்கு, கொல்கத் தாவை நோக்கி டிராக்டர் பேரணி செல்வதுதான்.

அதற்காக  வளர்ந்து நிற்கும் பயிர்களை தீயிட்டுக் கொளுத்த வேண்டிய நிலை வந்தாலும், அதைச் செய்ய நீங்கள் தயாராக இருக்க வேண்டும். விவசாயிகள், கிராமங்களில் பயிர்கள் அறு வடை செய்வதற்காக சென்று விடுவார்கள், அதனால் இந்த போராட்டம் நின்று விடும் என்று அரசு நினைக்கக் கூடாது. நாங்கள் பயிர்க ளையும் அறுவடை செய் வோம். அதேநேரத்தில் போராட்டத்தையும் தொடர்வோம். நாங்கள் வீடு களுக்குச் செல்ல மாட்டோம். உங்களுடைய டிராக்டர் களில் எரிபொருளை நிரப்பி, டில்லியை நோக்கி திருப்பி நிறுத்துங்கள். எந்த நேரத்தி லும் முன்னோக்கி வர உங் களுக்கு அழைப்பு வரலாம். விவசாய யூனியன்கள் அதனை முடிவு செய்யும்.

அரியானாவைத் தொடர்ந்து, மேற்கு வங்கம், கருநாடகா, தமிழ்நாடு, குஜ ராத் உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளிலும் மகாபஞ்சாயத்துகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்..

Comments