காவிரி நீரை தமிழகம் பயன்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானதாம்-கருநாடகா எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 27, 2021

காவிரி நீரை தமிழகம் பயன்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானதாம்-கருநாடகா எச்சரிக்கை

பெங்களூரு, பிப். 27- காவிரி உபரிநீரைப் பயன்படுத்தும் திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர கருநாடக மாநில அரசு சட்டக் குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது

காவிரிப் படுகையில் வெளியாகும் உபரி நீரை தமிழகம் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்று உள்துறை, சட்ட, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறி யுள்ளார். 26.2.2021 அன்று இது குறித்து பேசிய அவர், தமிழக அரசின் முடிவினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதாக கூறியுள்ளார்.

தொழில்நுட்ப வல்லுநர்கள், சட்ட வல்லுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத் திய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், காவிரி தீர்ப்பாயம், எந்த மாநிலத்திற்கும் உபரி நீரை ஒதுக்க வில்லை. இது போன்ற சூழலில் அதிகப் படியான நீரை அவர்கள் பயன்படுத்துவது சரியானதல்ல என்று கூறினார்.  காவிரி, வெள்ளாறு, வைகை, குண்டாறு அணை களை இணைக்கும் திட்டத்தை அடிக்கல் நாட்டு விழா மூலம் துவங்கி வைத்தது தமிழக அரசு. 42 டி.எம்.சி. நீரை தெற்கு மாவட்டங்களுக்கு விநியோகிக்க ஏற் படுத்தப்பட்ட திட்டமாகும்.

தீர்ப்பாய விதிகளின் கீழ் தமிழகம் பெறும் ஒதுக்கீட்டை விட இது அதிக மாக இருந்தது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

காவிரி தீர்ப்பாயம் 2007 ஆம் ஆண்டில் தமிழகத்திற்கு ஆண்டு தோறும் 419 டிஎம்சி நீரை வழங்க வேண்டும் என்று கூறியது. ஆனால் உச்ச நீதிமன்றம் அதை 2018 இல் 404 டிஎம்சி அடியாக மாற்றியது.

இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கெனவே கருநாடக முதல்வர் எடியூரப்பா மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திறம்பட சவால் விடுமாறு மாநில அரசு சட்டக் குழுவிடம் கேட்டுள்ளது.

கூட்டத்திற்கு தலைமை தாங்கிய நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கி ஹோலி, மாநில அரசு சட்டரீதியாகவும் அரசியல் ரீதியா கவும் தமிழகத்திற்கு சவால் விடும் என்று கூறினார்.

No comments:

Post a Comment