வன்னியர்களுக்கு தற்காலிகமாக 10.5 சதவீத உள்ஒதுக்கீடு

மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்

சென்னை, பிப். 27 வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா 26.2.2021 அன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு பின் உள்ஒதுக்கீடு 6 மாதத்தில் மாற்றி அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பேரவையில் முதல் வர் எடப்பாடி பழனிசாமி கூறிய தாவது: மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர் சமூகங்கள் சமச்சீரான வளர்ச்சி யைப் பெற்று முன்னேற்றுவதற் காகவும், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் அவர்களுக்கு உரிய விகி தாச்சார வாய்ப்பினை பெறுவதற் காகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபின ருக்குள் மிகவும் பிற்படுத்தப்பட் டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதமும், மிகவும் பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவில் சில குறிப்பிட்ட ஜாதிப் பிரி வுகளை ஒருங்கிணைத்து அவர் களுக்கு 7 சதவீதமும் மற்றும் மிக வும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள மற்ற ஜாதி பிரிவுகளுக்கு 2.5 சதவீதமும் ஆகிய 3 உட்பிரிவுக ளுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

 2012ஆம் ஆண்டு ஜனார்த்தனம் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரை அடிப் படையிலேயே இந்த சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இந்த ஒதுக்கீடு தற்காலி கமாக வழங்கப்படுகிறது. 6 மாத காலத்திலே ஜாதிவாரியாக கணக் கெடுப்பதற்காக இன்றைக்கு நட வடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கான ஆணையம் அமைக்கப்பட்டு அந் தப் பணி தொடங்கப்பட்டு இருக் கிறது. அது ஒவ்வொரு ஜாதிக்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் என்ற அடிப்படையில் வருகின்ற போது அது மாற்றியமைக்கப்படும்.

93 ஜாதியினருக்கு 7 சதவீத உள்ஒதுக்கீடு மட்டுமே...

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 20 சதவீத இடஒதுக்கீடு 3 ஆக பிரிக்கப்பட்டு வன்னியர்க ளுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9.5 சதவீத ஒதுக்கீட்டில் மீனவர், வலையர், வண்ணார், வேட்டுவ கவுண்டர், கொண்டையம் கோட்டை மறவர், கூட்டப்பால் கள்ளர், மற வர்கள், செம்பநாடு மறவர், பரவர், தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 93 ஜாதியினருக்கு 7 சதவீத உள்ஒதுக் கீடும், எஞ்சியுள்ள பிரிவினருக்கு 2.5 சதவீத உள்ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்படும். இதனால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள வன்னியர் தவிர்த்து மற்ற சமூகத்தினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Comments