சென்னை புத்தகக் காட்சியில் பிப்.28இல் தந்தை பெரியார் குறித்த ஆங்கிலப் புத்தகம் வெளியீட்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 27, 2021

சென்னை புத்தகக் காட்சியில் பிப்.28இல் தந்தை பெரியார் குறித்த ஆங்கிலப் புத்தகம் வெளியீட்டு விழா

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தொல். திருமாவளவன் எம்.பி. பங்கேற்பு

சென்னை, பிப். 27- சென்னை ஒய்எம்சிஏ வெளியரங்கில் 24.2.2021 அன்று தொடங்கி 9.3.2021 வரை புத்தகக் காட்சி நடைபெறுகிறது.  சென்னை புத்தகக் காட்சியில் 28.2.2021  ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 3 மணியளவில் ஊடகவி யலாளர் ஜி.பாபு ஜெயக்குமார் எழுதி எமரால்டு பப்ளிஷர்ஸ் பதிப்பித்துள்ள  தந்தைபெரியார் குறித்த ஆங்கில புத்தக (Periyar E.V.Ramasamy- A Man Ahead of his Time)  வெளியீட்டு விழா நடைபெறுகிறது. காலத்தைக் கடந்த சிந்தனையாளரான தந்தை பெரியார் பற்றிய செய்திகளை 20 தலைப்புகளில் தொகுத்து சிறப்பான நடையில் இதழாளர் பாபு.ஜெயக்குமார் இந்நூலில் எழுதியுள்ளார்.


எமரால்டு பப்ளிஷர்ஸ் உரிமையா ளர் கோ.ஒளிவண்ணன் வரவேற்கிறார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலை வர் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித் தமிழர் டாக்டர் தொல்.திருமாவளவன் புத்தகத்தை வெளியிடுகிறார். ‘பெரியார்திரைப்பட இயக்குநர் ஞான ராஜசேகரன்  அய்..எஸ். (ஓய்வு), தமிழ் மரபு அறக் கட்டளை பன்னாட்டமைப்பு இயக்குநர் டாக்டர் கே.சுபாஷினி ஆகியோர் புத்த கத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

திராவிடர் கழக (இயக்க) வெளி யீடான திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுதிய பெரியார் பதித்த கொள்கைத் தடங்கள், திராவிடர் கழக (இயக்க) வெளியீடு ஆங்கிலப் புத்தகம் Dravidian Worthies புத்தகம், காவ்யா வெளியீடான ஞான ராஜசேகரன் எழுதியபெரியார்திரைக்கதை புத்த கம் ஆகிய புத்தகங்கள் விழாவில் அறி முகப்படுத்தப்படுகின்றன. புத்தக ஆசிரி யர் பாபு ஜெயக்குமார் ஏற்புரையாற்று கிறார்.

வெளியீட்டு விழாவில் அறிமுகப் படுத்தப்படும் புத்தகங்கள் உள்பட தந்தைபெரியார், அன்னை மணியம் மையார், தமிழர் தலைவர், கலைஞர், இனமான பேராசிரியர், நாவலர் மற்றும் தலைவர்கள் எழுதிய புத்தகங்கள் பெரியார் புத்தக நிலைய அரங்கில் மார்ச் 9 வரை விற்பனைக்கு கிடைக்கிறது. விழா முடி வில் பெரியார் புத்தக நிலைய மேலாளர் ..நடராசன் நன்றி கூறுகிறார்.

No comments:

Post a Comment