கோவையில் எழுச்சியுடன் நடைபெற்ற "திராவிடம் வெல்லும்" சிறப்பு கூட்டம்

கோவை, பிப். 24- கோவை மண்டல திராவிட மாணவர் கழக கலந்துரையா டல் கூட்டம் 21.2.2021 அன்று 10:30 மணிக்கு கோவை அண்ணாமலை அரங்கில் எழுச்சியோடு நடை பெற்றது. மாநில திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர் இராசி.பிரபாகரன் தலைமை வகித்தார்.

மண்டல மாணவர் கழக செயலா ளர் மு.ராகுல் வரவேற்புரையாற்றி னார். திராவிடர் கழக மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குண சேகரன் தொடக்க உரை யாற்றினார்.

மாநில மாணவர் கழக அமைப் பாளர் இரா.செந்தூரப் பாண்டியன் சிறப்புரையாற்றினார்.

மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு .சண்முகம், சட்டக்கல்லூரி மாணவர் கழக துணைச் செயலாளர் பவதாரிணி, மண்டல இளைஞரணி செயலாளர் .பிரபாகரன், மாநகர தலைவர் கழக பேச்சாளர் புலியகுளம் .வீரமணி, மேட்டுப்பாளையம் மாண வர் கழக தலைவர் ரா.அறிவுமணி, திருப்பூர் மாவட்ட மாணவர் கழக தலைவர் திலீபன், மாவட்ட இளை ஞரணி தலைவர் வெ. பிரபாகரன், ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

புதிதாக கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்ட மதுரை ராம் குமாருக்கும் 82ஆவது பிறந்த நாள் கண்ட பெரியார் பெருந் தொண்டர் .கண்ணனுக்கும் பயனாடை அணி வித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து கோவை மாவட்ட திராவிடர் தொழிலாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் .சிற்றரசு தலைமையில் நடைபெற்றது.

திராவிட தொழிலாளர் அணியில் தம்மை இணைத்துக் கொண்டால் என்னென்ன சலுகைகள், உரிமைகள் கிடைக்கும் என்பதை விரிவாகவும் தெளிவாகவும் எடுத்து கூறி திராவிட தொழிலாளர் அணி மாநிலச் செய லாளர் மு.சேகர் சிறப் புரையாற்றினார்.

தொடர்ந்து திராவிடம் வெல்லும் என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் 12 மணி அளவில் நடைபெற்றது.

பெரியார் பெருந்தொண்டர் .கண்ணன், மண்டல செயலாளர் .சிற்றரசு ஆகியோர் தொடக்க உரையாற்றினார். நிறைவாக கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வம் உரையாற்றுகையில்,

மத்திய மதவாத பிஜேபி அரசின் ஜனநாயக படுகொலைகளை பட்டிய லிட்டதோடு அதற்கு அடிமையாக தமிழக அரசு நடந்து கொள்வதை சுட்டிக்காட்டி தமிழக மண் பெரியார் மண் இங்கு ஒருபோதும் பாஜக காலூன்ற அனுமதிக்க முடியாது. தமிழர் தலைவர் ஆசிரியர் காட்டும் திசையில் தொடர்ந்து போராடு வோம். திமுக ஆட்சி தளபதி முக ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் அமைய தொடர்ந்து களப்பணி ஆற்ற உறுதியேற்போம். திராவிடம் வெல்லும்! வரும் தலை முறை அதை சொல்லும்!

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

நிகழ்வில் மாவட்ட இளைஞரணி தலைவர் திராவிடமணி, தமிழ்ச் செல்வன், தோழர் தமிழ்முரசு, திக காளிமுத்து, சி.மாரிமுத்து, வீரமலை, நாகராஜ், சகுந்தலா, சரோஜா, ஜெ.ஜனனி, .தனலட்சுமி, மேட்டுப் பாளையம் மாவட்ட மாணவர் கழக தோழர்கள் ரா.அறிவுமணி, ரா.அன்பு மதி, மு.வீரமணி, மு.பிரபாகரன், .மோகன்குமார், கோவை மாணவர் கழக ..யாழினி, ஞா.தமிழ்செல்வன், அஜித், மற்றும் .சுரேந்தர்,ஜெ.வடி வேல், தருமலிங்கம், குவெகி.செந்தில், சுரேசன், மே..ரங்கசாமி, புண்ணிய மூர்த்தி, வெங்கிடு, தோழர் ரமேஷ், சா.ராஜா, .அர்ச்சுனன், சம்பத், இல. கிருஷ்ணமூர்த்தி, வெற்றி செல்வன், ராம் குமார், மற்றும் ஜிடி நாயுடு நினைவு பெரியார் படிப்பகம் பொறுப் பாளர் .மு.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிறைவாக கோவை மாவட்டம் மாணவர் கழக தலைவர் தக.கவுதமன் நன்றி கூறினார்.

புதிய பொறுப்பாளர்கள்

கோவை மாவட்ட மாணவர் கழக புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு:

தலைவர் வெ.யாழினி, துணை தலைவர் .சக்தி பழனியப்பன், செயலாளர் கவுதமன், துணை செயலாளர் .சி.தமிழ் நியூட்டன், அமைப்பாளர் ஞா.தமிழ்செல்வன், கோவை தமிழ் கல்லூரி அமைப்பாளர் அஜித், கற்பகம் கல்லூரி அமைப்பாளர் கு.ஆகாஸ், குமர குரு கல்லூரி அமைப் பாளர் திச யாழினி, வெள்ளளூர் நகர அமைப்பாளர் .பெரியார் மணி.

மேட்டுப்பாளையம் மாவட்ட மாணவர் கழக புதிய பொறுப்பா ளர்கள் அறிவிப்பு:

தலைவர் ரா.அன்புமதி, செயலா ளர் ரா.அறிவுமணி, துணைத் தலைவர் மு.பிரபாகரன், துணை செயலாளர் மோகன் குமார், அமைப்பாளர் மு.வீரமணி, திருப்பூர் மாவட்ட தலைவர் கு.திலிபன், செயலாளர் கு.கபிலன், நீலமலை மாவட்ட மாணவர் கழக தலைவர் ராம் குமார், ஆகியோர் புதிய பொறுப்பாளர்களாக அறிவிக் கப்பட்டனர்.

கோவை மாவட்ட திராவிடர் தொழிலாளர் கழக புதிய பொறுப் பாளர்கள் அறிவிப்பு:

கோவை மாவட்ட தொழிலாள ரணி தலைவர் குனியமுத்தூர் மு.தமிழ்செல்வம், துணை தலைவர் முத்து மாலையப்பன், செயலாளர் குறிச்சி .செல்வகுமார், அமைப்பா ளர் சுரேசன், ஆகியோர் அறிவிக் கப்பட்டனர்.

Comments